NEWS

நீட் தேர்வு: தருமபுரியை சேர்ந்த மாணவர் ஆதித்யா தற்கொலை

ஆதித்யா

நீட் தேர்வு அச்சம் காரணமாக தருமபுரியை சேர்ந்த ஆதித்யா என்ற மாணவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இலக்கியம்பட்டி பகுதியை சேர்ந்த மணிவண்ணன் மற்றும் சித்ரா தம்பதியினரின் மகனான 20 வயதுடைய ஆதித்யா, நீட் தேர்வுக்காக தன்னை தயார்படுத்திக் கொண்டிருந்தார்.

நாடு முழுவதும் நாளை நீட் தேர்வு நடைபெற இருக்கும் நேரத்தில், இந்த வாரத்தில் மட்டும் தமிழகத்தில் மூன்று பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

ஏற்கனவே இதே காரணத்தால் மதுரையை சேர்ந்த ஜோதி ஸ்ரீதுர்கா என்ற மாணவி இன்று காலை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

கடந்த வாரம் அரியலூர் மாவட்டத்தில் நீட் தேர்வுக்குத் தயாராகிவந்த மாணவர் ஒருவர் கிணற்றில் குதித்துத் தற்கொலைசெய்து கொண்ட சம்பவம் நிகழ்ந்தது.

ஜோதி ஸ்ரீதுர்கா மரணம்

மருத்துவ படிப்பிற்கான கட்டாய நுழைவு தேர்வான நீட் தேர்வில் மருத்துவ சீட் கிடைக்காவிட்டால் குடும்பத்தார் ஏமாற்றம் அடைவார்கள் என்ற அச்சத்தால் மதுரையைச் சேர்ந்த ஜோதி துர்கா இன்று காலை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

ஜோதி துர்கா

அந்த மாணவி சாகும் முன் தனது பெற்றோருக்கு உருக்கமான கடிதம் ஒன்றையும் எழுதியதாக கூறப்படுகிறது.

அந்த கடிதமானது சமூக ஊடகங்களிலும் அதிகமாக பகிரப்பட்டது.

அதில், தன் மீது தனது குடும்பம் அதிக நம்பிக்கை வைத்திருந்ததாகவும், தனக்கு கல்லூரி சீட் கிடைக்கவில்லை என்றால், அவர்கள் எடுத்த முயற்சிகள் அனைத்தும் வீணாகிவிடும் என்பதால் தற்கொலை முடிவை எடுத்ததாக அந்த மாணவி எழுதியிருந்தார்.

இறுதியில் “I am sorry. Am tired” என்று கூறி முடித்து இருந்தார்.

அந்த அதிர்ச்சியில் இருந்தே பலர் மீளாத நிலையில், தற்போது ஆதித்யாவின் மரணம் பலருக்கும் துயர செய்தியாக வந்திருக்கிறது

மாணவி பேசிய கடைசி வீடியோ
ஏற்கனவே நீட் தேர்வால் உயிரை மாய்த்த மாணவர்கள்
NEWS

BJR Christian Media

நன்மைசெய்கிறதில் சோர்ந்துபோகாமல் இருப்போமாக; நாம் தளர்ந்துபோகாதிருந்தால் ஏற்றகாலத்தில் அறுப்போம். கலாத்தியர் 6 9.

Thanks to Jeevitha Mary.

நீங்கள் இன்று செய்யும் நண்மையான காரியங்கள் நாளை மறக்கப்படலாம். எனினும் நன்மையையே செய்யுங்கள்.

தேவன் உங்களை வெற்றியாளாராக பார்க்கவில்லை. நீங்கள் அவருக்கு விசுவாசமாக வாழ்கின்றீர்களா என்றே பார்கின்றார்.

மக்கள் அடிக்கடி அறிவுக்கு எற்புடையதல்லாமல் சுயத்தையே மைய்யமாக வைத்துக்கொள்கின்றனர். அவர்களை எவ்வகையிலும் மன்னியுங்கள். அவர்களுக்கு நன்மையையே செய்யுங்கள்.

அன்பான வார்த்தைகள் விரைவில் மறைந்து போனாலும், அதன் எதிரொலி என்றும் கேட்குமென்பதை மறந்து விடாதீர்கள்.

நீங்கள் அன்பு செலுத்துகின்றவர்களாக இருந்தால், ஏதோ ஒரு உள்நோக்கத்திற்காக அன்பு காட்டுகிறார்கள் என்று உங்களைக் குற்றப்படுத்தலாம். எனினும் அன்புடனேயே இருங்கள். அவர்களுக்கு நன்மையையே செய்யுங்கள்.


நீங்கள் பிறரை குற்றப்படுத்தினால், அவர்களிடம் அன்பு காட்டுவதற்கு உங்களுக்கு நேரம் இருக்காது.

நீங்கள் நேர்மையாளராக இருந்தால் மக்கள் எளிதில் உங்களை ஏமாற்றிவிடலாம். ஆனாலும் நேர்மையாளராகவே இருங்கள். ஏமாற்றியவர்களுக்கும் நன்மையையே செய்யுங்கள்.

நம்மால் மிகப்பெரிய காரியங்கள் செய்து சாதிக்க முடியவில்லை என்றாலும், தேவனுக்காக சிறிய செயல்களையும் அன்புடன் செய்யுங்கள்.

நீங்கள் எப்பொழுதும் மகிழ்ச்சியிடனிருந்தால் மக்கள் பொறாமைப்படலாம். எனினும் நீங்கள் மகிழ்ச்சியோடேயே இருங்கள்.

வெறுப்பது யாராக இருந்தாலும், நேசிப்பது நீங்களாகவே இருங்கள். 

இந்த உலகில் நாம் நம் கண் முன்னால் காணும் ஒவ்வொருவரையும் நேசிக்க இயலவில்லை என்றால், காண முடியாத இறைவனிடம் எவ்வாறு அன்பு செலுத்த முடியும்.

நீங்கள் உங்களிலுள்ள மேன்மையானதை உலகத்திற்கு கொடுங்கள். ஆனாலும் ஒரு சிலருக்கு அது போதுமானதாக இருக்காது. ஆனாலும் தொடர்ந்து மேன்மையானதைக் கொடுத்துகொண்டே இருங்கள்.

இது உங்களுக்கும் அவர்களுக்குமுள்ள காரியமல்ல. இது தேவனுக்கும் உங்களுக்குமுள்ள காரியம் என்பதை முடிவிலே அறிந்துகொள்வீர்கள். – அன்னை தெரேசா

Thanks to Sister Jeevitha Mary

NEWS

NCC JEBA SINGH

அனுப்புநர்:

NCC ஜெபசிங்
மாநில ஒருங்கிணைப்பாளர்
நேஷனல் கிறிஸ்டியன் கவுன்சில் .தமிழ்நாடு

பெறுநர்

மாண்புமிகு. வனத்துறை அமைச்சர் அவர்கள்
தலைமை செயலகம்
சென்னை .

பொருள் :

காணி செட்டில்மெண்ட் பகுதியில் வசிக்கும் 10 ஆயிரத்துக்கும் அதிகமான காணி மக்களுக்கு கட்டுமான பொருட்களை கொண்டு செல்ல உடனடி அனுமதி வேண்டி .

வணக்கம் ஐயா –

கன்னியாகுமரி மாவட்டத்தில் 10 ஆயிரத்துக்கும் அதிகமான காணி பழங்குடி மக்கள் பல தலைமுறைகளாக வசித்து வருகின்றனர் .

பேச்சிப்பாறை, கோதையாறு, கீரிப்பாறை உள்ளிட்ட வனத்துறைக்கு உட்பட்ட பகுதிகளில் வசித்து வரும் இந்த மக்கள் தற்போது புதிய வீடுகள் கட்ட, பழுதடைந்த குடியிருப்புகளை சரி செய்ய, கழிப்பிடம் கட்ட போன்ற பணிகளுக்கு கட்டுமான பொருட்கள் கொண்டு செல்லும் போது வனத்துறையினர் சோதனைக் சாவடியிலேயே அனுமதி மறுத்து வருகின்றனர்.

மேலும் மலைவாழ் மக்கள் வசிக்கும் பகுதிகளில் சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்தவும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்

. மலைவாழ் மக்கள் வனங்களில் வாழ்வதற்குரிய பல்வேறு உரிமைகள் அளித்திருந்தாலும் மாவட்ட வன அதிகாரி, மற்றும் வனத்துறையினர் உரிமைகளை மறுத்து வருகின்றனர். இதனால் மலைவாழ் மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து வருகின்றனர் .

மேலும் புதிதாக வீடு கட்டுமானம் செய்யும் போது பட்டா உள்ளிட்ட ஆவண நகல்களை வனத்துறையினரிடம் கொண்டு சென்று ஒவ்வொரு லோடுக்கும் அனுமதி கேட்க வேண்டிய நிலை உள்ளது. இதில் பல நேரங்களில் அனுமதி கிடைக்காமல் மலைவாழ் மக்கள் அலை கழிக்கப்படுகின்றனர்

இதனால் பழுதடைந்த குடியிருப்புகளை சரி செய்ய புதிய விடுகள் கட்ட , கழிப்பிடம் கட்ட மலைப் பகுதிகளில் கட்டுமான பொருட்கள் கொண்டு செல்ல அனுமதியை உடனே வழங்க தாங்கள் உரிய நடவடிக்கை எடுக்கும்படி நேஷனல் கிறிஸ்டியன் , சார்பாக தங்கள் சமூகம் பணிந்து கேட்டுக்கொள்கிறோம்

இப்படிக்கு

NCC ஜெபசிங்
மாநில ஒருங்கிணைப்பாளர்
தமிழ்நாடு

NCC JEBA SINGH
NEWS

National Christian Council

அனுப்புநர்:

NCC ஜெபசிங்
மாநில ஒருங்கிணைப்பாளர்
நேஷனல் கிறிஸ்டியன் கவுன்சில் .தமிழ்நாடு

பெறுநர்:

மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் .
தலைமை செயலகம்.
சென்னை .

பொருள் :

விநாயகர் சதுர்த்தி அன்று சட்டம் ஒழுங்கை சீர்குலைப்பவர் மீது உறுதியான நடவடிக்கை எடுப்பதுதொடர்பாக .

கரோனா நோய் தடுப்பு கால கட்டத்தில் தமிழக அரசு விநாயகர் சதுர்த்தி விழாவை வீட்டிற்குள்ளேயே கொண்ட வேண்டும் எனவும், பொது இடங்களில் விநாயகர் சிலைகள் வைப்பது, ஊர்வலம் செல்வது ஆகியவை தடை செய்யபடுகிறது என தமிழக அரசால் அறிவிக்கப்பட்டது .

இந்த அறிவிப்பு ஒட்டுமொத்த தமிழக மக்களால் வரவேற்கப்பட்டது.

மாநில அரசு மக்கள் நலனில் நல்ல சிந்தனையோடும் ந்ல்ல நோக்கத்தோடும் கொண்டு வந்துள்ள இந்த உத்தரவை மீறப் போவதாகவும், தமிழகத்தில் ஒன்றரை லட்சம் விநாயகர் சிலைகளை வைத்து விழா கொண்டாட போவதாகவும் இந்து முன்னணி மாநில தலைவர் தெரிவித்துள்ளார் .

இவ்வாறு தமிழகத்தில் நடந்தால் தமிழக அரசின் தடை உத்தரவை மீறி இந்து முன்ணணி விழா நடத்த போவதாக அறிவித்துள்ள நிலையை தமிழக அரசு உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் .

தடையை மீறி விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாடி பிரச்சனை ஏற்படுத்தும் அமைப்புகள் மீது தமிழக அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என நேஷனல் கிறிஸ்டியன் கவுன்சில் சார்பாக கேட்டுக்கொள்கிறோம் .

இப்படிக்கு

NCC ஜெபசிங்
மாநில ஒருங்கிணைப்பாளர்
தமிழ்நாடு

National Christian Council
NEWS

NCC JEBASINGH

நெல்லையில் இன்று பரபரப்பு. கிறிஸ்தவ அமைப்பின் நிர்வாகி , கிறிஸ்தவ போதகர்களை ஊருக்குள் விட RSS பிரமுகர்கள் தடை

நெல்லை மாவட்டம் மானூர் தாலுகா நடு பிள்ளையார்குளம் பகுதியில் உள்ள மூணாறு நிலச்சரிவில் உயிர்ழந்தவர்களின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவிக்க இன்று (13.8.20) காலை 8 மணியளவில் திருநெல்வேலியிருந்து நேஷனல் கிறிஸ்டியன் கவுன்சில் மாநில ஒருங்கிணைப்பாளர் NCC ஜெபசிங் , தென்னிந்திய திருச்சபை தொடர்பு துறை இயக்குநர் Rev.கிப்ஸன் ஜான் தாஸ், மற்றும் சிமிர்னா A G சபை போதகர் ஜோயல் ஆகியோர் வாகனத்தில் நடு பிள்ளையார்குளம் சென்றனர்

கிராமத்தில் முன் பகுதியில் RSS பிரமுகர்கள் காரை வழிமறித்து தாங்கள் எங்கள் ஊரில் மூணாறு நிலச்சரிவில் உயிரிழந்த உறவினர்கள யாரையும் சந்தித்து ஆறுதல் கூற அனுமதிக்க மாட்டோம் என தெரிவித்து நீங்கள் திரும்பி செல்லுங்கள் என தெரிவித்தனர் .

NCC ஜெபசிங் . Rev. கிப்ஸன் ஜான் தாஸ் மற்றும் Rev.ஜோயல் ஆகியோர் நடு பிள்ளையார்குளம் ஊருக்குள் செல்ல முடியாமல் பிள்ளையார்குளத்தில் உள்ள CSi தேவாலயத்தில் பிராத்தனை செய்து விட்டு திரும்பினர்

. இந்த சம்பவத்திற்கு பல்வேறு சமூக ஆர்வலர்கள், கிறிஸ்தவ அமைப்புகளின் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து உள்ளது குறிப்பிடதக்கது .

NEWS

NCC Jebasingh

அனுப்புநர்

NCC ஜெபசிங்
மாநில ஒருங்கிணைப்பாளர்
நேஷனல் கிறிஸ்டியன் கவுன்சில் .தமிழ்நாடு.
Ph.814406 9997

பெறுநர்.

மாண்புமிகு தலைவர் அவர்கள்
மாநில சிறுபான்மை ஆணையம்
சென்னை.

பொருள்:

மதுரை புறநகர் மாவட்டம் சேடப்பட்டி ஒன்றியம் ஸ்ரீசதுரகிரி மகாலிங்கம் மலை அடிவாரத்தில் உள்ள ஜெப வீட்டை அகற்ற கோரிய புகார் மனு தள்ளுபடி செய்வது சம்பந்தமாக.

வணக்கம் ஐயா.

ஸ்ரீ சதுரகிரி மகாலிங்கம் மலை அடிவாரத்தில் அணைக்கரப்பட்டி திரு.பிரபாகரகன் த/பெ.தங்க அழகு கடந்த 25 வருடங்களாக லீபனோன் ஜெபவீடு நடத்தி வருகிறார். அங்குள்ள அனைத்து கிராம மக்களும் ஒன்றிணைந்து அனைத்து மத விழாக்களிலும் சகோதர/சகோதிரிகளாக பாவித்து விழாக்களை மத நல்லிணக்கத்தோடு கொண்டாடி வருகின்றனர்.

ஸ்ரீசதுரகிரி மகாலிங்கம் திருக்கோயிலில் ஆண்டுதோறும் நடக்கும் விழாக்கலுக்கு வரும் பக்தர்கள் அருகில் உள்ள ஜெப வீட்டில் தங்கி தான் கோயிலுக்கு சென்று வருவர்.

இப்படி ஒற்றுமையாக உள்ள கிராமத்தில் மத கலவரத்தை தூண்டும் விதமாக இந்து மக்கள் கட்சி மாவட்ட தலைவர் M. சோலைக் கண்ணன் என்பவர் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் ஜெபவீடு அகற்ற கோரி புகார் மனு அளித்துள்ளார்.மேற்படி மனு சம்பந்தமாக 8.8.20. அன்று சாப்டூர் காவல் நிலையத்தில் ஜெப வீட்டின் உரிமையாளர் திரு.பிரபாகரன் அவர்கள் ஆஜராகி ஜெபவீடு என்னுடைய சொந்த பட்டா இடத்தில் கட்டி உள்ளதாகவும். சதுரகிரி மகாலிங்கம் திருக்கோயிலுக்கு ஆண்டுதோறும் வரும் பக்தர்கள் என்னுடைய ஜெப வீட்டில் தங்கி திருவிழாவை காண்பதற்கு வருடா வருடம் அனைத்து உதவிகளையும் செய்து வந்து கொண்டு இருக்கிறேன் என்றும் மேலும் என்னுடைய அனுபவத்தில் இருந்த காலி நிலத்தை சதுரகிரி ஸ்ரீ மகாலிங்கம் திருக்கோயிலுக்கு தானமாக அளித்துள்ளேன் என்றும் அருகில் உள்ள அனைத்து கிராம மக்களும் இணைந்து சாதி மதம் பார்க்காது அனைத்து இன்ப | துன்ப நிகழ்வுகளில் ஒற்றுமையுடன் மத நல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்து வருகிறோம் என்பது மதுரை மாவட்ட மக்களுக்கு தெரியும் என்றும் தனது வாக்குமூலத்தை சாப்டூர் காவல் ஆய்வாளர் திருமதி. ஜெய பிரியா அவர்களிடம் . தெரிவித்து உள்ளனர்.

மேலும் ஜெபவீடால் எந்த ஒரு இடையூறும் இல்லை என்றும் அனைத்து மக்களுக்கும் பயன்படக்கூடிய வகையில் கிராம மக்கள் மத நல்லிணக்கத்துடன் செயல்படுகிறோம் என வண்டப்புலி ஊராட்சி மன்ற தலைவர் திரு.ஜெயராமன், 8வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் திரு.அழகுத் தாய் முனியாண்டி, வண்டாரி ஊராட்சி மன்ற தலைவர் திரு.நம்பியார், வண்டாரி முஸ்லிம் ஜமாத் தலைவர் முத்தவல்லி அப்துல் ஆகியோர் எழுத்து பூர்வமாக கடிதம் அளித்துள்ளனர்.

தமிழகத்தில் எந்த ஒரு மதக்கலவரம் ஏற்படாமல் நல்லாட்சி நடத்தி வரும் அரசிற்கு சிறுபான்மை மக்களிடையே கெட்ட பெயர் ஏற்படுத்த வேண்டும், மத கலவரத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற கெட்ட எண்ணத்தில் பொய் புகார் அளித்து ஒற்றுமையுடன் வாழ்ந்து வரும் கிராம மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்தும் நோக்கில் செயல்பட்டு இந்து மக்கள் கட்சி சார்பில் அளிக்கப்பட்ட பொய் புகாரை ரத்து செய்து பொது மக்களுக்கு எந்த ஒரு இடையூறு இல்லாமலும் அனைத்து மத மக்களும் ஜெபவீட்டை தொடர்ந்து பயன்படுத்தவும் தாங்கள் தக்க நடவடிக்கை எடுத்து உரிய ஆவண செய்யும்படி தங்கள் சமூகம் பணிந்து கேட்டுக்கொள்கிறேன்.

நன்றி.

இப்படிக்கு

ஆண்டவரின் பணியில்

NCC ஜெபசிங்

Jeba Singh / National Christian Council
NEWS

NCC Jeba Singh

அனுப்புநர்:

NCC ஜெபசிங்
மாநில ஒருங்கிணைப்பாளர்
நேஷனல் கிறிஸ்டியன் கவுன்சில் .தமிழ்நாடு.
Ph.8144069997

பெறுநர் .

மாண்புமிகு.தமிழக முதல்வர் அவர்கள்
தலைமை செயலகம்.
சென்னை .

பொருள் :

மாணவர்களுக்கு கூடுதலாக இணைய சேவை மையம் மற்றும் அரசு கல்லூரிகளில் விண்ணப்பிக்க கால அவகாசத்தை நீட்டிப்பது தொடர்பாக

வணக்கம் ஐயா.

தமிழகத்தில் மாணவ/மாணவர்கள் கரோனா ஊரடங்கு காரணமாக கல்லூரிகளில் நேரடியாக விண்ணப்பிக்க இயலாமல் விண்ணப்பங்கள் இணையவழியே கடந்த ஜுலை மாதம் 20 முதல் 31 வரை விண்ணப்பம் பெறப்பட்டது .

இணையவழியே தமிழக முழுவதும் மாணவ / மாணவிகள் விண்ணப்பிப்பது இதுதான் முதல் முறை. சாதாரண ஏழை ,எளிய கிராமப்புற மாணவர்கள் மலைவாழ் கிராமங்களில் உள்ள மாணவர்கள் போன்றவர்கள் விண்ணப்பிப்பதில் மிகவும் சிரமம் உள்ளது.

மேலும் இணைய சேவை மையங்களை அதிக இடங்களில் அமைத்து மாணவர்களுக்கு விண்ணப்பிப்பதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும். தமிழகத்தில் கடந்தாண்டு விண்ணப்பித்த மாணவர்களை விட இந்தாண்டு மிக குறைவாகவே விண்ணப்பித்துள்ளதாக தெரிகிறது. மாணவ / மாணவிகளுக்கு இணைய வழி விண்ணப்பிப்பதில் பல்வேறு பிரச்சனைகள் இருப்பதால் பல மாணவர்கள் விண்ணப்பிக்க முடியாமல் போனது .

12 ம் வகுப்பில் ஒரு தேர்வு மட்டும் எழுதாமல் இருந்த 34 ஆயிரம் மாணவர்கள் தேர்வு எழுதி தற்போது முடிவுகள் வந்துள்ளன . அந்த மாணவர்கள் புதிதாக விண்ணப்பிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர் .

எனவே தமிழக அரசு மாணவ/மாணவிகளின் நலன் கருதி இம்மாதம் இறுதி வரை இணைய வழியில் விண்ணப்பிக்க கால அவகாசத்தை தாங்கள் வழங்கிடவும், அரசு சார்பில் இணைய சேவை மையங்களை அதிகமாக அமைத்து மாணவ | மாணவிகளுக்கு உதவிடவும் மேற்கண்ட கோரிக்கை நேஷனல் கிறிஸ்டியன் கவுன்சில் சார்பாக கேட்டுக் கொள்கிறோம் .

இப்படிக்கு
NCC ஜெபசிங்
மாநில ஒருங்கிணைப்பாளர்
தமிழ்நாடு

National Christian Council
NEWS

NCC Jeba Singh

அனுப்புநர்.

NCC ஜெபசிங்
மாநில ஒருங்கிைணப்பாளர்
நேஷனல் கிறிஸ்டியன் கவுன்சில் தமிழ்நாடு. Ph.8144069997 .

பெறுநர்

மாண்புமிகு.தமிழக முதல்வர் அவர்கள்
தலைமை செயலகம்
தமிழ்நாடு .

பொருள் :

தமிழகத்தில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களை உடனடியாக திறப்பது மற்றும் திருச்சபை ஊழியர்களுக்கு நிவாரண நிதி வழங்குவது குறித்து..

வணக்கம் ஐயா,

கரோனா ஊரடங்கு காலத்தில் தேவாலயங்கள் அனைத்தும் மத்திய அரசால் மூடப்பட்டன

தற்போது கடந்த மாதங்களில் இருந்து கிராம புறங்களில் உள்ள தேவாலயங்கள் திறப்பதற்கு தாங்கள் உத்தரவு பிறப்பித்தீர்கள். அனைத்து கிறிஸ்தவ மக்கள் சார்பாக முதலில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் .

தற்போது கரோனா நோய் தொற்று படிப்படியாக குறைந்து வருவது நாம் அனைவருக்கும் ஆறுதலாக உள்ளது.

இந்த சூழ்நிலையில் திருச்சபைபோதகர்கள் , ஊழியர்கள் மிகவும் பெரிய பாதிப்பையும் , பொருளாதார பின்னனடவையும் சந்தித்து வருகிறார்கள் .

தமிழக அரசு கூறும் அனைத்து விதிமுறைகளையும் கடைபிடித்து முகக் கவசம், சமூக இடைவெளி, ஆகியவற்றுடன் தேவலாயங்களை திறந்து ஆராதனை நடத்த தாங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளிலும் தமிழக அரசு கூறும் அனைத்து விதிமுறைகளையும் கடைபிடிப்போம் என தெரிவித்துக் கொள்கிறோம் .
.

தமிழகத்தில் உள்ள பதிவு பெற்ற திருச்சபை ஊழியர்களுக்கு கரோனா கால நிவாரண நிதியாக 5000/௹பாய் வழங்க தாங்கள் ஆவண செய்யும்படியும் தமிழக கிறிஸ்தவ திருச்சபை ஊழியர்கள் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்

தமிழகத்தில் சிறுபான்மை மக்களுக்கு பல்வேறு சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வரும் தங்களது அரசுக்கு எங்களது வாழ்த்துக்களையும் , நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறோம் .

இப்படிக்கு

ஆண்டவரின் பணியில்
NCC ஜெபசிங்
மாநில ஒருங்கிணைப்பாளர்
நேஷனல் கிறிஸ்டியன் கவுன்சில் தமிழ்நாடு

NCC jeba Singh
NEWS

NCC JEBA SINGH

ஆன்லைன் கல்வித் திட்டத்தை தடை செய்ய தேசிய குழந்தைகள் நல ஆணையத்தில் நேஷனல் கிறிஸ்டியன் கவுன்சில் மாநில ஒருங்கினணப்பாளர் NCC ஜெபசிங் புகார் மனு .

ஏழை எளிய நடுத்தர குடும்பத்தை சேர்ந்த குழந்தைகளின் பெற்றோர்களால் ஆன்ட்ராய்டு செல்போன், மற்றும் மடிக்கணினி வாங்க முடியாத சூழலில் அவர்கள் எப்படி ஆன்லைன் வகுப்புகளில் கலந்து கொள்ள முடியும்,,?

ஆன்லைன் வகுப்புகளால் குழந்தைகளுக்கு கண், காதுகள் பாதிக்கப்பட அதிக வாய்ப்புகள் உள்ளதாக அரசு மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர்

, மேலும் ஆன்லைன் மூலம் வகுப்புகளில் இடையிடையே ஆபாச வலைதளங்கள் வந்து குழந்தைகளின் கவனத்தை சிதறடிக்கப்படுவது . மிகவும் கருத்தில் கொள்ள வேண்டிய ஒன்றாகும் .

மாற்று திறனாளி குழந்தைகளுக்கு எவ்வாறு கல்வி வழங்க பட வேண்டும் என்பது குறித்த அறிவிப்பு இதுவரை வெளியிடப்படவில்லை .

எனவே ஆன்லைன் வகுப்புகளை தடை செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேசிய குழந்தைகள் நல ஆணையத்தில் நேஷனல் கிறிஸ்டியன் கவுன்சில் மாநில ஒருங்கினணப்பாளர் NCC ஜெபசிங் புகார் மனுவில் தெரிவித்துள்ளார்

NCC JEBA SINGH
NEWS

NCC Jebasingh

தமிழகத்தில் கல்லூரி இறுதித் ஆண்டு செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்ய நேஷனல் கிறிஸ்டியன் கவுன்சில் மாநில ஒருங்கிணைப்பாளர் NCC ஜெபசிங் தமிழக முதல்வருக்கு கோரிக்கை மனு.

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் இறுதி ஆண்டு செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் .

கரோனா பாதிப்பு காரணமாக பள்ளி தேர்வு ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து கலை , அறிவியல், பாலிடெக்னிக், பொறியியல் என அனைத்து கல்லூரிகளிலும் இறுதி ஆண்டு செமஸ்டர் தேர்வு தவிர அனைத்து தேர்வுகளும் *ரத்து *செய்யப்படுவதாக தமிழக* அரசு அறிவித்தது.

இந்நிலையில் இறுதி ஆண்டு செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்யாமல் காலம் தாழ்த்துவதால் மாணவர்கள் கேம்பஸ் இன்டர்வியூவில் தேர்வாகி காத்திருக்கும் மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படும் .

வங்கியில் கல்விக் கடன் பெற்று படிக்கும் மாணவ / மாணவிகள் உரிய காலத்தில் வேலைக்கு செல்லவில்லை எனில் மிகப் பெரிய பாதிப்பை அவர்கள் சந்திக்க நேரிடும் .

கல்வித்துறை உடனடியாக மாணவர்கள் , பெற்றோர்கள் , பொதுமக்களிடம் கருத்துக்களை கேட்கவும், இந்த ஊரடங்கு காலத்தில் தேர்வு எழுதக்கூடிய மாணவர்களுக்கு நோய் தொற்று ஏற்பட்டால் அவர்களின் எதிர்காலம் கேள்வி குறியாகி விடும்.

எனவே தமிழக முதல்வர் அவர்கள் தமிழ் நாட்டில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் இறுதி ஆண்டு செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என நேஷனல் கிறிஸ்டியன் கவுன்சில் சார்பாக கேட்டுக்கொள்கிறோம் .

Jeba Singh

ABM TV
NEWS

NCC JEBASINGH

தமிழ்நாடு அரசால் தமிழ்நாடு தனியார் துறை வேலைவாய்ப்பு இணையம் துவக்கப்பட்டுள்ளது . கிறிஸ்தவ இளைருர்கள் பயன் பெற நேஷனல் கிறிஸ்டியன் கவுன்சில் மாநில ஒருங்கினணப்பாளர் NCC ஜெபசிங் வேண்டுகோள் .

தமிழ்நாடு அரசால் தமிழ் நாட்டில் உள்ள தனியார் துறைகள் மூலம் வேலை வாய்ப்புகளை பெற்று தரும் பொருட்டு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை மூலம் பிரத்தியோகமாக வடிவமைக்கப்பட்ட தமிழ்நாடு தனியார் வேலை இணையம் Tamilnadu Private Job Portal ( http://www.tnprivateJobs.tn.gov.in) தமிழக முதலமைச்சர் அவர்களால் ( 16.6.20 ) அன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது .

தனியார் துறையில் பணியாற்ற விரும்பும் நமது கிறிஸ்தவ இளைஞர்கள் இவ்இணைய தளத்தில் நேரடியாக பதிவு செய்து தங்களது கல்வி தகுதி, முன் அனுபவம் ஆகியவற்றிக்கு ஏற்ப பணிகளை பெறுவதற்கு தமிழகத்தில் உள்ள அனைத்து தனியார் துறைகளும் இவ் இணையத்தில் வேலை வாய்ப்புகளை பதிவேற்றம் செய்து பணிகளை வழங்க இவ் இணையம் வழிவகை செய்கிறது .

வேலை அளிப்போர், வேலை நாடுவோர் இவ் இணையத்தில் எவ்வித பதிவு கட்டணம் இன்றி முற்றிலும் இலவசமாக பயன் பெற தமிழக அரசால் வழங்கப்படுகிறது .

தற்போதைய சூழ்நிலையில் தமிழ்நாடு தனியார் துறை வேலை இனணய தளம் மூலம் இணைய வழி நேர்காணல்.பணி நியமனம் ஆகிய வசதிகளை பயன்படுத்தி அதிக எண்ணிக்கையில் கிறிஸ்தவ இளைஞர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என நேஷனல் கிறிஸ்டியன் கவுன்சில் சார்பாக அன்புடன் கேட்டுக்கொள்கிறோம் .

மேலும் இவ் இணையதளத்தை பயன்படுத்துவது தொடர்பாக ஆலோசனைகள் தேவை படின் அத்தந்த மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை தொடர்பு கொண்டு விபரங்களை இளைஞர்கள் பெற்றுக் கொள்ளலாம்

வேலை வாய்ப்பு குறைவாக உள்ள இந்த கரோனா கால கட்டத்தில் கிறிஸ்தவ இளைஞர்கள் தமிழக அரசால் ஏற்படுத்தப்பட்டுள்ள இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி வாழ்வில் முன்னேற்றம் அடைய நேஷனல் கிறிஸ்டியன் கவுன்சில் தமிழ்நாடு சார்பாககேட்டுக்
கொள்கிறோம்

ஆண்டவரின் பணியில்

NCC ஜெபசிங்
மாநில ஒருங்கிணைப்பாளர்

NCC JEBA SINGH
NEWS

National Christian Council

நேஷனல் கிறிஸ்டியன் கவுன்சில் தமிழ்நாடு (NCC)

+2 தேர்ச்சிக்குப் பின்
SC/ST/SCA BC(converted christian ) * இஸ்லாமிய / கிறிஸ்தவ சிறுபான்மை மாணவ / மாணவியருக்கு பொறியியல் கல்லூரி படிப்புகான 4ஆண்டுகள் கல்வி கட்டணம் ,தங்கும் விடுதி முற்றிலும் சலுகை கட்டணத்திலும் மத்திய / மாநில அரசின் சிறுபான்மையினருக்கான கல்வி உதவி தொகை மூலம் பயில ஏற்பாடு செய்கிறோம் .

BC / MBC / BCM முதல் தலைமுறை மாணவர்களுக்கு பொறியியல் கல்லூரிபடிப்புகான 4ஆண்டுகள் கல்வி கட்டணம் ,தங்கும் விடுதி சலுகை கட்டணத்தில் படிக்க நேஷனல் கிறிஸ்டியன் கவுன்சில் தமிழ்நாடு. ஏற்பாடு செய்கிறது .

Courses Offer BE

Aeronautical Engg
Agricultural Engg
Computer Science & Engg
Mechanical engineering

PG.Courses

ME Aeronautical

ME CAD / CAM

ME Computer Science & Engg

MBA Master of Business Adminitrasion

DOCTORAL DEGREE
PR0GRAMMES

Ph.D in Computer Science & Engg

Ph.D in Electronics & Communication engg.

டிப்ளமோ முடித்தவர்கள் BE படிக்கலாம் .
Any Degree முடித்தவர்கள் , சலுகை கட்டணத்தில் ME, MBA, படிக்க நேஷனல் கிறிஸ்டியன் கவுன்சில் ஏற்பாடு செய்கிறது.

அனைத்து இஸ்லாமிய / கிறிஸ்தவ சிறுபான்மை மாணவ-மாணவியருக்கும் உயர் கல்விசமந்தப்பட்ட ஆலோசனை வழங்கப்படும்.

நேஷனல் கிறிஸ்டியன் கவுன்சில் தமிழ்நாடு.(NCC )

திரு.NCC ஜெபசிங் மாநில ஒருங்கிணைப்பாளர்

Rev.கிப்ஸன் ஜான் தாஸ்
இயக்குநர். தென்னிந்திய திருச்சபை தொடர்பு துறை – திருநெல்வேலி மாவட்டம்

Rev.பாபு பால் தினகரன்
முதன்மை இணை செயலாளர் | பெந்தேகோஸ்தே சபைகளின் மாமன்றம் _ தமிழ்நாடு .

BJR கிறிஸ்டியன் மீடியா. கன்னியாகுமரி மாவட்டம்

தொடர்புகொள்ள வேண்டிய கைபேசி எண்கள்

: 8144069997., 9842355776, 8248489864
Kindly forward to all group’s

Video

NEWS

NCC JEBA SINGH

தமிழக கிராம மக்களின் பொது குடிநீர் இணைப்பு ரத்து செய்யப்பட்டு இலவச குடிநீருக்கு கட்டணம் வசூலிக்கும் திட்டத்தை ரத்து செய்ய நேஷனல் கிறிஸ்டியன் கவுன்சில் மாநில ஒருங்கிணைப்பாளர் NCC ஜெபசிங் அறிக்கை

தமிழ்நாட்டில் கிராமங்களில் தற்போது வரை உள்ளாட்சி அமைப்புகள் மூலம் மக்களுக்கு இலவசமாக பொது குடிநீர் இணைப்பு மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது . மேலும் தனியாக குடிநீர் இணைப்பு தேவைப்படுவோர் உள்ளாட்சி நிர்வாக அனுமதியோடு குடிநீர் இணைப்பு பெற்று கொள்ளும் நடைமுறை உள்ளது .

தற்போது மத்திய அரசு ஜல் சக்தி துறை மூலம் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு தர போவதாக அறிவிப்பு வந்துள்ளது .

மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு தரப்படும் இணைப்பிற்கு ரூபாய் 3000 பணம் செலுத்த வேண்டும் எனவும், மாதம் ரூபாய் 50 கட்டணம் செலுத்த வேண்டும் அதிகாரிகள் வாய்மொழியாக கூறியுள்ளனர் .

இனி வரும் காலங்களில் கிராமங்களில் பொது குடிநீர் குழாய்கள் கட்டாயம் அகற்றப்படும் எனவும் கூறப்படுகிறது. வரும் காலங்களில் ஒவ்வொரு குடிநீர் இணைப்பிலும் மீட்டர் பொருத்த எற்பாடு உள்ளதாகவும் கூறப்படுகிறது. எவ்வளவு நீர் பயன்படுத்துகிறோமே அவ்வளவு தொகை செலுத்த வேண்டும் . எனவும் பொது இலவச குடிநீர் இணைப்பு இனி இருக்க வாய்ப்பு இல்லை. எனவும் தெரிகிறது .

தஞ்சை மாவட்டத்தில் 10 ஊராட்சிகளில் ஜல்சக்தி பணிகள் துவக்கப்பட்டுள்ளன

இத்திட்டத்தின் மூலம் விவசாய தொழிலாளர்கள், ஏழை எளிய மக்கள் மிகவும் கடுமையாக பாதிக்கப்படுவார்கள்

ஆகவே பழைய நடைமுறைப்படியே கிராம உள்ளாட்சிகள் மூலம் பொது இலவச குடிநீர் வழங்கும் திட்டம் தொடர வேண்டும் எனவும், காசு கொடுத்து குடிநீர் வாங்கும் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் எனவும் நேஷனல் கிறிஸ்டியன் கவுன்சில் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்

NATIONAL CHRISTIAN COUNCIL / JEBA SINGH
NEWS

Jebasingh National Christian Council

திருநெல்வேலி மாவட்டத்தில் முகக் கவசம் அணிவதை தீவிரமாக கண்காணிக்க நேஷனல் கிறிஸ்டியன் கவுன்சில் மாநில ஒருங்கிணைப்பாளர் NCC ஜெபசிங் மாவட்ட ஆட்சித்தலைவருக்கு மனு .

கரோனா நோய் தொற்று திருநெல்வேலி மாவட்டத்தில் மிக அதிகமாக பரவி வருகிறது.

இச்சூழலில் கரோனா நோய் தொற்று பரவுவதை தடுக்க திருநெல்வேலி மாவட்ட நிர்வாகம் பல்வேறு நல்ல நடவடிக்கைகளை செய்து வருவது பாராட்டுக்குரியது ஆகும்

மேலும் திருநெல்வேலி மாவட்டத்தில் குறிப்பாக , திருநெல்வேலி மாநகராட்சி பகுதிகளில் பல இடங்களில் பெரும்பான்மையான மக்கள் முறையாக முகக் கவசம் அணியாமல் நகரில் பல இடங்களில் வலம் வந்த வண்ணம் உள்ளனர் . முகக் கவசம் கட்டாயம் என தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில் அதை பின்பற்றாமல் இருப்பது கரோனா தொற்றை அதிகரிப்பதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளது
.

மேலும் மாநகராட்சி சுகாதார பணியாளர்கள் பலர் முகக் கவசம் அணிந்தும் முகங்களில் அணியாமல் வாய்ப் பகுதிக்கு கீழே அணிந்து கொண்டு பணி செய்வதை மாநகரத்தில் பல இடங்களில் காண முடிகிறது . உரிய பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றாமல் பெரும்பாலான ஊழியர்கள் பணி செய்து வருவது கவலைக்குரியதாகும் .

ஆகவே தாங்கள் காவல் துறைக்கும் மாநாகராட்சி ஆணையாளருக்கு தகுந்த அரசின் அறிவுரையும் உத்தரவையும் வழங்கி அனைவரும் முகக் கவசம் அணிந்து வெளியே வர தாங்கள் ஆவண செய்ய நேவுனல் கிறிஸ்டியன் கவுன்சில் சார்பாக கேட்டுக்கொள்கிறோம் .

Jeba Singh. National Christian Council
NEWS

NATIONAL CHRISTIAN COUNCIL

நேஷனல் கிறிஸ்டியன் கவுன்சில் சார்பில் திருநெல்வேலி மாவட்டத்தில் இன்று ( 10.7.20) மாலை 5.30 மணிக்கு சிறுபான்மையினர் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது .

திருநெல்வேலி மாவட்டம் பாளையங் கோட்டையில் மறுரூப ஆலயத்தில் வைத்து மாவட்ட சிறுபான்மையினர் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது .

மாநில சிறுபான்மை ஆணையம் தலைவர் மாண்புமிகு ஜான் மகேந்திரன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தமிழக அரசு சார்பில் சிறுபான்மையிருக்கு செயல்படுத்தும் திட்டங்கள் குறித்து சிறப்புரை ஆற்றினார். கூட்டத்திற்கு நேஷனல் கிறிஸ்டியன் கவுன்சில் மாநில ஒருங்கிணைப்பாளர் NCC ஜெபசிங் தலைமை தாங்கினார்
.
திருநெல்வேலி CSi திருமண்டலம் சார்பில் Rev.கிப்ஸன் ஜான் தாஸ் வரவேற்புரை ஆற்றினார்.

கூட்டத்தில்
சிறுபான்மை பொருளாதார கண்காணிப்பு குழு உறுப்பினர் ஹயாத் முகம்மது

இக்னேஷியஸ் கல்வியியல் கல்லூரி செயலாளர் அருட்சகோதரி மேகி

இக்னேஷியஸ் கான்வெண்ட் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை அருட்சகோதரி சுகந்தி,

இக்னேஷியஸ் கான்வெண்ட் மேல்நிலைபள்ளி தாளாளர் பெடலிஸ் ,
அருட்சகோதரி ருபி,

மேலப்பாளையம் முஸ்லிம் மேல்நிலைப் பள்ளி செயலாளர் அப்துல் மஜீத்

பாளை கத்தோலிக்க மறை மாவட்டம் சார்பில் அருட்தந்தை .மை.பா.ஜேசு ராஜ்

இந்திய தேவ சபை போதகர் லாசர்

திருநெல்வேலி CSi திருமண்டல பாலியர் நேசர் இயக்குனர் Rev.டேவிட்அன்பு பிரபாகரன்,
Rev.கோல்டுவின் ,
ஆவே பேலன்,

சாராள் டக்கர் கல்லூரி ஆட்சி மன்ற குழு முன்னாள் உறுப்பினர் பீட்டர் சாம்,

சாராள் டக்கர் கல்லூரி பேராசிரியர் திருமதி. கிதா,ஆகியோர் கூட்டத்தில் கலந்து கொண்டனர் .

NEWS

NCC Request

மும்பையில் தாதர் பகுதியில் அண்ணல் அம்பேத்கர் வசித்து வந்த ராஜ்க்ருஹா இல்லத்தின் மீது தாக்குதல் நடத்திய சமூக விரோதிகளை கைது செய்து தாக்குதலுக்கான காரணங்களை முழுமையாக விசாரிக்கபட வேண்டும் என நேஷனல் கிறிஸ்டியன் கவுன்சில் மாநில ஒருங்கிணைப்பாளர் NCC ஜெபசிங் அறிக்கை.

டாக்டர் பி.ஆர் அம்பேத்கர் அவர்களின் இல்லம் ராஜ்க்ருஹா அண்ணல் அம்பேத்கர் பயன்படுத்திய பொருட்கள், நூல்கள் ஆகியவை வைக்கப்பட்டு அருங்காட்சியமாக அமைக்கபட்டுள்ளது

அதன் இன்னொரு தளத்தில் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர் .

.( 7.7-20) அன்று சமூக விரோதிகள் இருவர் அங்குள்ள சிசிடிவி கேமராக்களை உடைத்து, இல்லத்தின் கண்ணாடி, ஜன்னல்கள் மீது கற்களை வீசி முழுவதையும் சேதப்படுத்தி உள்ளனர்

. வீட்டின் வெளியே உள்ள பூஞ் செடிகள் உட்பட அனைத்தையும் ஒரு சில நிமிடங்களில் சேதப்படுத்தி அங்கிருந்து தப்பித்து உள்ளனர் .

இந்தியாவின் முக்கியமான தலைவரின் இல்லத்தின் மீது சமூக விரோதிகள் நடத்திய தாக்குதலுக்கான காரணங்களை மகாராஷ்டிரா மாநில அரசு முழுமையாக விசாரித்து உண்மையை கண்டறிந்து குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என நேஷனல் கிறிஸ்டியன் கவுன்சில் தமிழ்நாடு கமிட்டி சார்பாக அறிக்கையில் தெரிவித்துள்ளார் .

NEWS

NCC request to kanyakumari collector

கரோனா நோய் தொற்று நோயாளிகளுக்கு உரிய நேரத்தில் உணவு வழங்கவும், போதிய இடவசதியை ஏற்படுத்தி கொடுக்கவும் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித் தலைவருக்கு நேஷனல் கிறிஸ்டியன் கவுன்சில் மாநில ஒருங்கிணைப்பாளர் NCC ஜெபசிங் கோரிக்கை. மனு .

கன்னியாகுமரி மாவட்டத்தில் கரோனா தொற்று மிகவும் விரைவாக பரவி வருகிறது.

ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கரோனா தொற்று உள்ளவர்கள் அனுமதிக்கப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது .

கரோனா தொற்று உள்ளவர்களுக்கு அரசு அறிவுறுத்தலின் படி சரியான நேரத்தில் உணவு வழங்கப்பட வேண்டும். ஆனால் கரோனா தொற்று சிகிச்சையில் உள்ளவர்களுக்கு உரிய நேரத்தில் உணவு வழங்கபடவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. .

மருத்துவ நிர்வாகத்திடம் பல முறை புகார் அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் உணவு வழங்குவதற்கு எடுக்கவில்லை

. மேலும் அதிகமான நோயாளிகள் இருப்பதால் இட வசதியும் குறைவாகவே உள்ளது .

தினமும் காலை 10.30 மணிக்கு தான் காலை உணவு வழங்கபடுவதாகவும் மதிய உணவு 4 மணி வரை வழங்கப்படாததாலும் கரோனா நோயாளிகள் சில தினங்களுக்கு முன்பு போராட்டம் நடத்தி உள்ளனர்.

பல்வேறு வயதில் சிறுவர் முதல் முதியோர் வரை கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ளனர் . பலருக்கு சர்க்கரை நோயும் பலவிதமான உடல் உபாதைகள் உள்ளவர்கள் அனுமதிக்கப்ட்டுள்ளனர்

ஆகவே மாவட்ட ஆட்சித் தலைவர் உடனடியாக தலையிட்டு போர்க்கால நடவடடிக்கை எடுத்து சரியான நேரத்தில் உணவு வழங்கிடவும் , போதிய இடவசதியை ஏற்படுத்தி கொடுக்கவும் நேஷனல் கிறிஸ்டியன் கவுன்சில் தமிழ்நாடு சார்பாக கேட்டுக்கொள்கிறோம் .

NEWS

NCC Jeba singh Request

மலக்குழியில் இறங்கி உயிர்ப் பலியாகும் இளைஞர்களுக்கு கல்வியும், தொழிற்பயிற்சியும், வழங்க நேஷனல் கிறிஸ்டியன் கவுன்சில் மாநில ஒருங்கினணப்பாளர் NCC ஜெபசிங் வலியுறுத்தல் .

மலக்குழியில் இறங்கி சுத்தம் செய்யும் தொழிலாளர்கள் உயிர் இழப்பால் அவர்களது குடும்பம் மிகவும் வறுமையால் பாதிக்கப்படுகிறது .

தூத்துக்குடி மாவட்டம் செக்கார குடியில் தனியார் வீட்டு உரிமையாளர் அழைப்பின் பேரில் 2.7.20 அன்று செப்டிக் டேங்க் கழிவுநீர் அகற்றும் போது திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த நான்கு பேர் விஷவாயு தாக்கி உயிரிழந்த சம்பவம் மிகவும் வறுத்ததிற்குரியது.

மலம் கையால் அள்ள தடைவிதித்து சட்டம் உள்ள போதிலும் மலக்குழியில் இறங்க வைத்து வேலை செய்ய வைத்த வீட்டு உரிமையாளர் மீது சட்ட படியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இறந்து போன இளைஞர்கள் நான்கு பேருக்கும் தமிழக அரசு தலா 25 லட்சமும் குடும்பத்தில் உள்ள ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும்.

மலக்குழியில் இறங்கி விஷ வாயு தாக்கி இறப்பது தமிழகத்தில் தொடர்கதையாகி உள்ளது. . தமிழக அரசு இத் தொழிலில் ஈடுபடும் இளைஞர்களுக்கு தனியாக அவர்களுக்கு என்று தொழிற்கல்வியைப் தொடங்கி பயிற்சி அளித்து வேலை வாய்ப்பு வழங்க நேஷனல் கிறிஸ்டியன் கவுன்சில் தமிழ்நாடு சார்பாக கேட்டுக்கொள்கிறோம் .

National Christian Council
NEWS

Voice of Justice

ஆண்டவருக்கு நன்றி.

சாத்தான்குளம் அப்பாவி வணிகர்கள் திரு ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் எந்த ஒரு குற்றமும் செய்யாதவர்களை சாத்தான்குளம் காவல் அதிகாரிகள் , மற்றும் காவலர்கள் அடித்து துன்புறுத்தி கொலை செய்துள்ளனர்

மதுரை ஐகோர்ட் கிளை தானாக முன் வந்து வழக்கு பதிந்து , சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட்டது .

சிபிசிஐடி அதிகாரிகள் உடனடியாக விசாரித்து கொலை வழக்கு பதிந்து 5 காவர்களை கைது செய்து விரைந்து நடவடிக்கை எடுத்து வணிகர்கள் மற்றும் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்து நீதியை நிலைநாட்டிய தமிழக அரசுக்கும் , நீதிபதிகளுக்கும் சிபிசிஐடி காவல்துறை அதிகாரிகளுக்கும் Voice of Justice ( நீதியின் குரல்) சார்பாக பாராட்டுக்களை ‘வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம் 👏👏

.Dr.அன்புராஜன் ( நிறுவனர் தலைவர்)

Rev.கிப்ஸன் ஜான் தாஸ் . இயக்குநர்

திரு. பா.ஜெபின் ராஜ் . இயக்குநர்.

திரு. NCC ஜெபசிங் .இயக்குநர்.

Pr. பாபு பால் தினகரன். இயக்குநர்

திரு.சித்தரஞ்சன் . இயக்குநர்.

Voice of Justice ( நீதியின் குரல்) தமிழ்நாடு.

NEWS

NCC JEBA SINGH

அனுப்புநர் . 2..7.20

NCC ஜெபசிங்
மாநில ஒருங்கிணைப்பாளர்
நேஷனல் கிறிஸ்டியன் கவுன்சில் தமிழ்நாடு
Cell .814406 9997

பெறுநர் .

மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் .
தமிழ்நாடு

பொருள் . ஞாயிற்றுகிழமைகளில் கிறிஸ்தவ ஆலயங்களை திறக்க கோரி . மனு .

மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு

தமிழகத்தில் 1 ந் தேதி முதல் கிராம புறங்களில் மத வழிப் பாட்டு தளங்களை திறக்க தாங்கள் அனுமதி வழங்கியதற்கு கிறிஸ்தவ மக்கள் சார்பாக நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்

கிறிஸ்தவ மக்கள் ஞாயிறு வழிபாட்டிற்கு முக்கியம் கொடுத்து ஆலயத்திற்கு சென்று வருவர் .

ஆனால் தற்சமயம் கரோனா நோய் தடுப்பு பணிகளில் 4 வார ஞாயிறு கிழமைகளில் முழு ஊரடங்கை அரசு அறிவித்துள்ளது .

இந் சூழ்நிலையில் கிறிஸ்தவ மக்கள் அதிகம் ஆலயத்திற்கு செல்லும் ஞாயிற்றுகிழமைகளில் ஆலயத்திற்கு செல்ல முடியாத சூழ்நிலை உள்ளது.

சிறுபான்மை மக்களுக்கு பாதுகாப்பாக விளக்கும் தங்கள் அரசு ஞாயிறு கிழமை மட்டும் கிறிஸ்தவ மக்கள் காலை மற்றும் மாலை இரு வேளை ஆலயத்திற்கு சென்று ஆராதனைகளில் கலந்து கொள்ள தாங்கள் உடனடியாக ஆவண செய்ய நேஷனல் கிறிஸ்டியன் கவுன்சில் தமிழ் நாடு சார்பாக கேட்டுக்கொள்கிறோம் .

நன்றி .

இப்படிக்கு.

NCC ஜெபசிங்
மாநில ஒருங்கிணைப்பாளர் .

NEWS

Wishes from NCC jebasingh

தேசிய மருத்துவர்கள் தினம். நேஷனல் கிறிஸ்டியன் கவுன்சில் மாநில ஒருங்கிணைப்பாளர் NCC ஜெபசிங் வாழ்த்து செய்தி .

தேசிய மருத்துவர்கள் தினம் இன்று (ஜூலை 1 ) கொண்டாடப்படுகிறது .

கரோன நோய் தடுப்பு காலத்தில்  மக்களின் உயிருக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பால் மக்கள் அனைவரும் மருத்துவர்களை தெய்வமாக பார்க்கிறார்கள் .

மருத்துவர்கள் தங்களது நலனை விட மக்களின் நலனை பாதுகாப்பதிலும், அவர்களுக்கு மருத்துவ சேவை செய்வதிலும் அதிக முக்கியத்துவம் கொடுத்து நாட்டில் அரசாங்கத்தோடு இணைந்து அவர்கள் செய்யும் தன்னலமற்ற மருத்துவ பணி பாராட்டுக்குரியது .

இந்திய நாட்டில் உள்ள அனைத்து மருத்துவர்களுக்கும் நேஷனல் கிறிஸ்டியன் கவுன்சில் தமிழ்நாடு சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

NCC ஜெபசிங்
மாநில ஒருங்கிணைப்பாளர் .தமிழ்நாடு

NEWS

Father and son duo allegedly killed in police custody for opening shop beyond time in Tamil Nadu.

THOOTHUKUDI: Tension gripped across the district on Tuesday after a 63-year-old father and his 31-year-old son belonging to Sathankulam were allegedly killed in police custody. Kin of the deceased and the traders have suspected police torture for the death of the duo and protested seeking severe punishment against 13 police personnel. Condemning the killing of two traders in police custody, traders bodies shut down shops at Sathankulam, Udangudi, Peikulam here on Tuesday.

Sources said that J Fenix (31) was declared dead at Kovilpatti government hospital by 8 pm on Monday while his father P Jeyaraj (63) died in the same hospital in the wee hours on Tuesday. The bodies of the deceased have been shifted to Government medical college hospital in Tirunelveli.

A trader from Sathankulam said that police detained P Jeyaraj, a timber trader from Sathankulam on June 19, for opening shop beyond 9 pm and was escorted to the police station for an inquiry. His son Fenix, who runs a mobile shop, went to the station to ask police to release him. However, police had remanded both the father and son under sections 188, 269, 294(b), 353 and 506(2) of IPC. 

It is said that the duo were shifted to Kovilpatti sub-jail as per the current protocol governing isolation for the suspects before being shifted to Palayamkottai central prison.

Another source said that Sathankulam police attacked Fenix badly for protesting against beating his father in the station, and there had been an altercation. Police had beaten both father and son black and blue at Kovilpatti sub-jail as well, sources added. 

On Monday evening, Fenix was bleeding and shifted to Kovilpatti GH where he succumbed. Subsequently, Jeyaraj was shifted to GH after suffering respiratory trouble off late, however, he also succumbed without responding to treatment. 

The death of two traders had sparked tension as shops were shut at various parts of the district condemning the police brutality.

Sathankulam traders shuttered the shops and squatted in front of Sathankulam Kamarajar statue demanding to invoke murder charges against 13 police personnel of the Sathankulam station who attacked the father and son duo.

Thoothukudi Superintendent of Police Arun Balagopalan visited the Sathankulam and held talks with the protesters.

Tamil Nadu Traders Association president Vellaiyan had asked to shut down shops across the district, said district president Vinayagamurthi.

Video: https://youtu.be/9RVcfNVWrT0

In Kovai : Video – https://youtu.be/TTe_Otc64AA

Tamil Nadu police department is always violating on common people. They have to realise that they don’t have any rights to show violance on people. And the whole police department should apologise to the Tamil nadu people for their mistakes.

Sign this petition

NEWS

National Christian Council

தமிழக முதல்வருக்கு நேஷனல் கிறிஸ்டியன் கவுன்சில் மாநில ஒருங்கிணைப்பாளர் NCC ஜெபசிங் கோரிக்கை மனு .

சாத்தான்குளம் இரு வணிகர்கள் படுகொலை விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக ரிமாண்டை ஏற்றுக் கொண்ட குற்றவியல் நடுவரும் குற்றவாளியே! .

ரிமாண்ட் ஏற்கும் போது கைது செய்யப்பட்டவரின் உடலில் உள்ள காயங்களை குற்றவியல் நடுவர் கண்காணித்து இருக்க வேண்டும். நீதிமன்ற காவலில் அடைக்கும் முன் கொலைகாரர்கள் தாக்கல் செய்யும் கைது அறிக்கையை சரிபார்த்து இருக்க வேண்டும்.

7 வருடத்திற்கு உட்பட்ட தண்டனைக்குரிய குற்றங்களில் யாரையும் கைது செய்ய வேண்டிய அவசியம் இல்லை.

அதனையும் மீறி கைது செய்தே தீர வேண்டும் என்றால் அதற்கான காரணத்தை காவல்துறையினர் அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும்.

அறிக்கை நியாயமானதாக இருக்கும் பட்சத்திலேயே குற்றவியல் நடுவர் ரிமாண்டை ஏற்க வேண்டும் .

ஆனால் இந்த விதிமுறைகள் எதையும் குற்றவியல் நடுவர் செய்யாமல் ரிமாண்டை ஏற்றுக் கொண்டிருப்பதன் மூலமாக சட்டத்தை குழி தோண்டி புதைத்து கொலைக்கு உடந்தையாக இருந்துள்ளார்.

அப்பாவி பொதுமக்களை கொலை செய்வதை காவல்துறை வாடிக்கையாக வைத்துள்ளது.

சட்டத்தின்படி செயல்பட வேண்டிய நீதித்துறையோ, காவல்துறைக்கு உடந்தையாக உள்ளது.

நீதித்துறை நடுவர் பணி நீக்கம் செய்யப்பட வேண்டியவர் .

குற்றவியல் நடுவர் மீது தகுந்த சட்ட நடவடிக்கை எடுக்க நேஷனல் கிறிஸ்டியன் கவுன்சில் சார்பாக தமிழக முதல்வரை பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம் .

NEWS

NCC Jebasingh

மாவட்ட தலைமை நீதிபதிக்கு உச்ச நீதிமன்ற தீர்ப்பு 176 ன் படி உடற்கூறாய்வு செய்ய அவசர மனு .

.
சாத்தான்குளம் அரசரடி தெருவை சேர்ந்த திரு.ஜெயராஜ் , மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோரை அவர்களது கடை அடைப்பு சம்பந்தமாக போலிசாருக்கும் அவர்களுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.

சாத்தான்குளம் போலிசார் வழக்கு பதிவு செய்து பென்னிக்ஸ் மற்றும்.அவரது தந்தை ஜெயராஜ் ஆகியோரை கொலை வெறி தாக்குதல் நடத்தி சிறையில் அடைத்துள்ளனர் . சிறையில் உடல் நலம் குன்றி இருவரும் மரணம் அடைந்து விட்டனர்.

இன்று ( 23.6.20 ) நடைபெறும் உடற்கூறாய்வை உச்சநீதிமன்ற தீர்ப்பு 176 மற்றும் தேசிய மனித உரிமை ஆணையம் வழிகாட்டி நெறிமுறைகளின்படி உடற்கூறாய்வு செய்ய வலியுறுத்தி மாவட்ட நீதிபதியிடம் .மனு அளிக்கப்பட்டது –

நேஷனல் கிறிஸ்டியன் கவுன்சில் .தமிழ்நாடு.

NEWS

National Christian Council

ஆண்டவருக்கு நன்றி.

_ (21.6.20) காலை_ மதுரை திரும்ங்கலகத்தில் மாநில சிறுபான்மை ஆணைய தலைவர் மாண்புமிகு ஜான் மகேந்திரன் ஐயா அவர்களை நேஷனல் கிறிஸ்டியன் கவுன்சில் மாநில ஒருங்கிணைப்பாளர் NCC ஜெபசிங் அவர்கள் சந்தித்து நாகை மாவட்டம் மயிலாடுதுறை வட்டம் அடியமங்கலம் கிராமத்தில் கத்தோலிக்க திருச்சபைக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமிப்பு செய்து பிரச்சனையாக்கி வரும் BJP பிரமுகர்கள் மீது நடவடிக்கை எடுக்க புகார் மனு கொடுக்கப்பட்டது .

தலைவர் அவர்கள் உடனடியாக விசாரித்து நடவடிக்கை எடுக்க ஆவண செய்வதாக உறுதி அளித்துள்ளார்

நேஷனல் கிறிஸ்டியன் கவுன்சில் | தமிழ்நாடு .

NEWS

Oppression Relief

நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறை வட்டம் , அடியமங்கலம் கிராமத்தில் கத்தோலிக்க திருச்சபையை சேர்ந்த புனித சவேரியார் பேராலயத்துக்கு 27.10.2000 அன்று கிராம பகுதியில் ஏழை எளிய மாணவ மாணவியருக்கு கல்வி கொடுக்கும் நோக்கத்தோடு மேற்கண்ட நிலம் வாங்கப்பட்டது .

தற்சமயம் கரோனா ஊரடங்கை பயன்படுத்தி அந்த பகுதியில் உள்ள இந்து அமைப்பினர்கள் மேற்கண்ட இடத்தை ஆக்கிரமிப்பு செய்து விநாயகர் சிலையை வைத்து வழிபாடு நடத்தி அமைதியாக உள்ள கிராமத்தில் இரு பிரிவினருக்கு இடையே மத கலவரத்தை தூண்ட கூடிய விதத்தில் செயல்பட்டு வருகின்றனர்

அமைதி பூங்காவான தமிழகத்தில் இது போன்ற மதகலவரத்தை உருவாக்கும் விதத்தில் செயல்படும் சமூக விரோத கும்பல்களை தமிழக காவல் துறை உடனடியாக கைது செய்து சிறுபான்மையினருக்கு பாதுகாப்பான நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறோம்

Oppression Relief

NCC Jeba Singh
Director. oppression Relief

State Coordinator
National Christian Council.Tamilnadu

BJR
Director. oppression Relief
malaysia .

Fr. M Jesu Raj. Tamilnadu. Director_oppression Relief.

NEWS

The Voice Of Oppression

ஆண்டவருக்கு நன்றி.

செங்கல்பட்டு மாவட்டம் வாயலூர் கிராமத்தில் மெய் சமாதான சபை நடத்தி வந்த மாற்று திறனாளி போதகர் ரமேஷ்(பார்வையற்றவர்) அவர்களின் சபை கடந்த 12ந் தேதி சமூக விரோதிகளால் தீ வைத்து எரிக்கப்பட்டது .

மேற்கண்ட சம்பவம் தொடர்பாக இன்று (18.6.20) காவல் நிலையத்தில் FIR Copy பெறப்பட்டது .

FIR COPY

FIR COPY
Fir Copy

காவல் உதவி ஆய்வாளர் வழக்கு சம்மந்தமாக விசாரணை தீவிரமாக நடை பெற்று வருவதாக தமது oppression relief இயக்குனரிடம் தெரிவித்தார் . விரைந்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டது .

போதகர் ரமேஷ் அவர்களுக்கு சபை முழுவதும் எரிந்து விட்டதால் மீண்டும் புதிதாக சபை கட்டப்பட வேண்டிய சூழ்நிலையில், உள்ளார் .

சபை கட்டுவதற்கு Steel sheet , சிமெண்ட், மணல், செங்கல், கூலி செலவு – 150000/ Battery Speaker- 12000/ பாய் – 5000/ மைக்செட் – 10000/ table- 5000/ Chair – 12000/Band set – 6000/ ட்ராஸ் – 30000/ தார்பாய் – 6000/ light System – 25000/ மொத்தம் 2,61000 செலவாகிறது .

கிறிஸ்தவ விசுவாசிகள் / போதகர்கள் தங்களால் முடிந்த உதவியை செய்யும்படி oppression Relief சார்பாக கேட்டுக்கொள்கிறோம் .

கரோனா நோய் தடுப்பு ஊரடங்கிலும் நமது போதகருக்கு நம்மால் முடிந்த உதவிகளை செய்தால் நலமாக இருக்கும். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக.

தாங்கள் செய்யும் உதவியை மாற்று திறனாளி போதகர் ரமேஷ் (பார்வையற்றவர்) அவர்களின் வங்கி கணக்கில் செலுத்தும்படி கேட்டுக்கொள்கிறோம்

வங்கி விபரம்.
Pr. Ramesh
Canara Bank
A/c No.1348101038191
IfSc CODE – CNRB0001348
VAYALOOR BRANCH

Contact no: 9566534560

பாதிப்புக்குள்ளான தமிழ் கிறிஸ்தவ போதகர்களை பாதுகாக்கும் அமைப்பு . Oppression relief ( the Voice of oppression)

NCC. Jeba Singh
Director . ( oppression Relief )
State Coordinator. national Christian Council. Tamilnadu .

BJR . Director ( 0ppression Relief )
malaysia.

oppression Relief. Tamilnadu

The Voice Of Oppression
Press Report. By National Christian Council
Press Report By National Christian Council

https://bjrchristianmediagroup.wordpress.com/2020/06/15/ncc-jeba-singh-raise-complaint/

ஜெபசிங். நேஷ்னல் கிறிஸ்டின் கவுன்சில்

தமிழ் நாட்டில் போதகர்களுக்கோ, அல்லது சபைகளுக்கோ எவ்வித பிரச்சினைகள் ஏற்பட்டாலும் எம்மை தொடர்புக் கொள்ளலாம். உங்களுக்கு உதவ நாங்கள் தயாராக உள்ளோம். பாதிப்புக்குள்ளான தமிழ் கிறிஸ்தவ போதகர்களை பாதுகாக்கும் அமைப்பு . Oppression relief ( the Voice of oppression)

தொடர்புக்கு:

NCC. Jeba Singh
Director . ( oppression Relief )
State Coordinator. national Christian Council. Tamilnadu . தொடர்பு எண்: +91 81440 69997

BJR . Director ( 0ppression Relief ) E-Mail : bjrchristianmedia@gmail.com. bjreditteam@gmail.com

  • நீட் தேர்வு: தருமபுரியை சேர்ந்த மாணவர் ஆதித்யா தற்கொலை
    நீட் தேர்வு அச்சம் காரணமாக தருமபுரியை சேர்ந்த ஆதித்யா என்ற மாணவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இலக்கியம்பட்டி பகுதியை சேர்ந்த மணிவண்ணன் மற்றும் சித்ரா தம்பதியினரின் மகனான 20 வயதுடைய ஆதித்யா, நீட் தேர்வுக்காக தன்னை தயார்படுத்திக் கொண்டிருந்தார். நாடு முழுவதும் நாளை நீட் தேர்வு நடைபெற இருக்கும் நேரத்தில், இந்த வாரத்தில் மட்டும் தமிழகத்தில் மூன்று பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். ஏற்கனவே இதே காரணத்தால் மதுரையை சேர்ந்த ஜோதி ஸ்ரீதுர்கா என்ற மாணவி இன்று… Continue reading நீட் தேர்வு: தருமபுரியை சேர்ந்த மாணவர் ஆதித்யா தற்கொலை
  • BJR Christian Media
    நன்மைசெய்கிறதில் சோர்ந்துபோகாமல் இருப்போமாக; நாம் தளர்ந்துபோகாதிருந்தால் ஏற்றகாலத்தில் அறுப்போம். கலாத்தியர் 6 9. நீங்கள் இன்று செய்யும் நண்மையான காரியங்கள் நாளை மறக்கப்படலாம். எனினும் நன்மையையே செய்யுங்கள். தேவன் உங்களை வெற்றியாளாராக பார்க்கவில்லை. நீங்கள் அவருக்கு விசுவாசமாக வாழ்கின்றீர்களா என்றே பார்கின்றார். மக்கள் அடிக்கடி அறிவுக்கு எற்புடையதல்லாமல் சுயத்தையே மைய்யமாக வைத்துக்கொள்கின்றனர். அவர்களை எவ்வகையிலும் மன்னியுங்கள். அவர்களுக்கு நன்மையையே செய்யுங்கள். அன்பான வார்த்தைகள் விரைவில் மறைந்து போனாலும், அதன் எதிரொலி என்றும் கேட்குமென்பதை மறந்து விடாதீர்கள். நீங்கள்… Continue reading BJR Christian Media
  • NCC JEBA SINGH
    அனுப்புநர்: NCC ஜெபசிங்மாநில ஒருங்கிணைப்பாளர்நேஷனல் கிறிஸ்டியன் கவுன்சில் .தமிழ்நாடு பெறுநர்‘ மாண்புமிகு. வனத்துறை அமைச்சர் அவர்கள்தலைமை செயலகம்சென்னை . பொருள் : காணி செட்டில்மெண்ட் பகுதியில் வசிக்கும் 10 ஆயிரத்துக்கும் அதிகமான காணி மக்களுக்கு கட்டுமான பொருட்களை கொண்டு செல்ல உடனடி அனுமதி வேண்டி . வணக்கம் ஐயா – கன்னியாகுமரி மாவட்டத்தில் 10 ஆயிரத்துக்கும் அதிகமான காணி பழங்குடி மக்கள் பல தலைமுறைகளாக வசித்து வருகின்றனர் . பேச்சிப்பாறை, கோதையாறு, கீரிப்பாறை உள்ளிட்ட வனத்துறைக்கு உட்பட்ட… Continue reading NCC JEBA SINGH
  • National Christian Council
    அனுப்புநர்: NCC ஜெபசிங்மாநில ஒருங்கிணைப்பாளர்நேஷனல் கிறிஸ்டியன் கவுன்சில் .தமிழ்நாடு பெறுநர்: மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் .தலைமை செயலகம்.சென்னை . பொருள் : விநாயகர் சதுர்த்தி அன்று சட்டம் ஒழுங்கை சீர்குலைப்பவர் மீது உறுதியான நடவடிக்கை எடுப்பதுதொடர்பாக . கரோனா நோய் தடுப்பு கால கட்டத்தில் தமிழக அரசு விநாயகர் சதுர்த்தி விழாவை வீட்டிற்குள்ளேயே கொண்ட வேண்டும் எனவும், பொது இடங்களில் விநாயகர் சிலைகள் வைப்பது, ஊர்வலம் செல்வது ஆகியவை தடை செய்யபடுகிறது என தமிழக அரசால்… Continue reading National Christian Council
  • NCC JEBASINGH
    நெல்லையில் இன்று பரபரப்பு. கிறிஸ்தவ அமைப்பின் நிர்வாகி , கிறிஸ்தவ போதகர்களை ஊருக்குள் விட RSS பிரமுகர்கள் தடை… நெல்லை மாவட்டம் மானூர் தாலுகா நடு பிள்ளையார்குளம் பகுதியில் உள்ள மூணாறு நிலச்சரிவில் உயிர்ழந்தவர்களின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவிக்க இன்று (13.8.20) காலை 8 மணியளவில் திருநெல்வேலியிருந்து நேஷனல் கிறிஸ்டியன் கவுன்சில் மாநில ஒருங்கிணைப்பாளர் NCC ஜெபசிங் , தென்னிந்திய திருச்சபை தொடர்பு துறை இயக்குநர் Rev.கிப்ஸன் ஜான் தாஸ், மற்றும் சிமிர்னா A G சபை… Continue reading NCC JEBASINGH
NEWS

Attention Please

கிறிஸ்துவுக்கு பிரியமான அனைத்து சபை போதகர்களே மற்றும் அனைத்து சபை விசுவாசிகளே அனைவருக்கும் அன்பின் வாழ்த்துக்கள் 👏👏.

தமிழகத்தில் கிறிஸ்தவ போதகர்கள் | கிறிஸ்தவ சபைகள் தாக்கப்படும் போது அவர்களுக்கு தேவையான உதவிகளை உடனடியாக செய்து கொடுப்பதற்கு தமிழக அளவில் oppression Relief என்ற தன்னார்வ அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது .

oppression Relief அமைப்பின் ஒருங்கிணைப்பாளராக NCC ஜெபசிங். தமிழ்நாடு | BJR .மலேசியா. ஆகியோர் தலைமையின் கீழ் செயல்படுகிறது .

தமிழக கிறிஸ்தவ போதகர்கள் தங்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை உடனடியாக oppression Relief தொலைபேசி எண் 8144069997 க்கு தெரிவித்தால் சட்ட நடவடிக்கைகள், நிவாரண உதவிகள் போன்றவை உடனடியாக செய்து கொடுக்கப்படும்

கிறிஸ்துவின் பணியில் oppression Relief அமைப்பு போதகர்களுக்கு எந்த வித கட்டணமும் வசூலிப்பதில்லை. உதவிகள் முழுவதும் சேவை மனப்பான்மையுடன் செய்து கொடுக்கப்படுகிறது.👏👏

oppression Relief தொடர்பு கொள்ள 8144069997 என்ற எண்ணை 24×7 முழுவதும் போதகர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் 👏👏.

கிறிஸ்துவின் பணியில் .👏👏

oppression Relief Tamilnadu.

NCC. ஜெயசிங்
மாநில ஒருங்கிணைப்பாளர்
நேஷனல் கிறிஸ்டியன் கவுன்சில் தமிழ்நாடு

BJR கிறிஸ்டியன் மீடியா.
மலேசியா . 👏👏

Oppression Relief. The Voice Of Oppression
NEWS

NCC Jeba Singh Raise Complaint

செங்கல்பட்டு மாவட்டத்தில் வாயலூர் கிராமத்தில் கிறிஸ்தவ சபையை தீயிட்டு கொளுத்திய சமூக விரோதிகளை உடனடியாக கைது செய்து சிறையில் அடைக்க தமிழக முதல்வருக்கு நேஷனல் கிறிஸ்டியன் கவுன்சில் மாநில ஒருங்கின ணப்பாளர் NCC ஜெபசிங் கோரிக்கை .

செங்கல்பட்டு மாவட்டம் வாயலூர் கிராமத்தில் மாற்று திறனாளியான போதகர் ரமேஷ் (கண் தெரியாதவர்) கடந்த 10 வருடங்களாக மெய் சமாதான சபை நடந்தி வருகிறார் .

12. ந் தேதி இரவு சமூக விரோத கும்பல்கள் போதகர் சபையை முழுவதுமாக தீயிட்டு கொளுத்தி நாசம்படுத்தியுள்ளனர்
.
சபையில் உள்ள பொருட்கள் அனைத்தும் தீயில் கருகி நாசமாகி விட்டன.

சுமார் 2 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் , அனைத்தும் தீயில் எரிந்து விட்டன .

அமைதி பூங்கா வான தமிழகத்தில் தங்களுடைய ஆட்சியில் மதககலவரத்தை துண்ட கூடிய விதத்தில் மேற்கண்ட சம்பவம் நடைபெற்றுள்ளது .

கிறிஸ்தவ மக்கள் மத்தியில் மேற்கண்ட நிகழ்வு ஒரு வித அச்ச உணர்வை ஏற்படுத்தி உள்ளது.

ஆகவே தாங்கள் கிறிஸ்தவ சிறுபான்மையினருக்கு ஏற்பட்டுள்ள இந்த பாதிப்பில் தலையிட்டு உடனடியாக சமூக விரோத கும்பலை கைது செய்து சிறையில் அடைக்கவும் , தீயில் கருகிய பொருட்கள் மற்றும் சபைக்கு தேவையான நிவாரண உதவிகளை வழங்கிட நேஷனல் கிறிஸ்டியன் கவுன்சில் தமிழ்நாடு கமிட்டி சார்பாக கேட்டுக்கொள்கிறோம் .

ஜெபசிங். மாநில ஒருங்கிணைப்பாளர். நேஷ்னல் கிறிஸ்டின் கவுன்சில்
பாதிக்கப்பட்ட சபை போதகர். ரமேஷ்.       வயது . 40. செங்கல்பட்டு
முழுதும் எரிந்த நிலையில் சபை
சபை எரிந்த நிலையில்
இசைக்கருவிகள், உள்ளிட்ட அனைத்து பொருட்களும் தீயில் கருகிய நிலையில்.
செங்கல்பட்டு காவல் நிலையத்துக்கு . போதகர் ரமேஷ் அவர்கள் அளித்த புகார் கடிதம்.
சபை போதகர் ரமேஷ்.அவர்கள், செங்கல்பட்டு காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்ட புகாரின் நகல்…

NEWS

Request From NCC

கிறிஸ்துவுக்கு பிரியமான அன்பு சகோதர / சகோதிரிகளே.

கிறிஸ்தவ சபைகளுக்குள் வருத்தங்கள் குழப்பங்கள் வேண்டாம்

யோவான் 17:21 எல்லோரும் ஒன்றாக இருபார்களாக. தந்தையே நீர் என்னுள்ளும் நான் உம்முள்ளும் இருப்பது போல் அவர்களும் ஒன்றாய் இருப்பார்களாக . இதுவே இயேசு கிறிஸ்துவின் தாகம்

ஊரு இரண்டானால் கூத்தாடிக்கு(சாத்தானுககு) கொண்டாட்டம் என்பார்கள்

கிறிஸ்துவம் பிளவுபட நாம் ஒரு போதும் அனுமதியோம் .

இனி மேலாவது அனைத்து சபைகளும் ஒற்றுமையாக இருப்போம் ஜெபிப்போம்.

ஆண்டவரின் பணியில்,

நேஷனல் கிறிஸ்டியன் கவுன்சில்,

தமிழ்நாடு

Click the link and Watch Daily Updated on Facebook

NEWS

Fake Bishop Godfrey

கதறும் காட்பிரே நோபுள்

திருநெல்வேலி மாவட்டம் இட்டேரி கிராமத்தில் வசிக்கும் காட்பிரே நோபுள் என்பவர் கடந்த 2004 ஆண்டு முதல் 2008 ஆண்டு வரை தனது வீட்டில் வேலை பார்த்து வந்தவரிடம் தன்னுடைய கார் டிரைவர் திருமணத்திற்கு என்று அவருடைய 8 பவுன் தாலி சங்கிலியையும் ரூபாய் 50000 த்தையும் பெற்றுக் கொண்டு கடந்த 16 வருடங்களாக தாலி செயினையும், பணத்தையும் திருப்பி கொடுக்காமல் ஏமாற்றி வந்துள்ளார்

. தற்சமயம் சமூக வலைதளங்களில் காட்பிரே நோபுள் அடிக்கடி பேசுவதை கேள்விட்ட வேலைகாரம்மா அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு தாலி செயினையும் பணத்தையும் கேட்டபோது காட்பிரே நோபுள் கதறி கொண்டு விரைவில் கொடுத்து விடுவதாக தெரிவித்துள்ளார் .

தாலி செயின் I மற்றும் பணத்தை பறித்து தனது கார் டிரைவர் திருமணத்தை நடத்தி வைத்தவர் காட்பிரே நோபுள்.

தற்போது டிரைவர் அவர்கள் தனிசபை ஆரம்பித்து போதகர் வேடத்தில் நெல்லையில் வலம் வந்து கொண்டு இருக்கிறார்.

கிறிஸ்தவ ஜனமே போலிகளை அடையாளம் கண்டுகொள்ளுங்கள் .

Tamil Christian media

KANYAKUMARI

மேற்குதொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு!

தென்மேற்கு பருவமழை பெய்ய தொடங்கியதை அடுத்து, தமிழகத்தில் மேற்குதொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. 

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், கேரளாவை ஒட்டிய கன்னியாகுமரி மாவட்டத்திலும் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிள்ள அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. 77 அடி உயரம் கொண்ட பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் 45 அடியை தாண்டியது. இதேபோல், சிற்றார் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து, வேகமாக நிரம்பி வருவதால், தாமிரபரணி ஆற்றின் கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு 3வது நாளாக வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், தென்மேற்கு பருவமழை மற்றும் வெப்பசலனம் காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், தஞ்சாவூர், நெல்லை, கன்னியாகுமரி உள்ளிட்ட 13 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Tamil Christian media

NCC Jebasingh

காட்மேன் இணையவழி கதைத் தொடர் வெளியிட்டை உறுதி செய்க!

தமிழக அரசுக்கு நேஷனல் கிறிஸ்டியன் கவுன்சில் கோரிக்கை .

மாநில ஒருங்கிணைப்பாளர் NCC ஜெபசிங் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.

2020 ஜீன் 12ந் தேதி ஜீ 5 செயலியில் வெளியாகவிருந்த இத்தொடரின் முன்னோட்ட காட்சி மே 26ந் தேதி யூட்யூப்பிலும் ஜீ 5 நிறுவனத்தின் அதிகாரபூர்வ சமூக வலைத்தளங்களிலும் வெளியானது .

ஒரு நிமிட முன்னோட்ட காட்சியில் சில வசனங்கள் தங்கள் சாதியை அவமதிப்பதாகவும் ஆகவே இத்தொடரை தடை செய்ய வேண்டும்மெனவும் தமிழ்நாடு பிராமணர் சங்கத்தை சேர்ந்த சிலர் தமிழகத்தில் பல்வேறு காவல் நிலையங்களில் புகார் அளித்திருக்கிறார்கள்.

380 நிமிடங்கள் கொண்ட இத்தொடரில் ஒரு நிமிட முன்னோட்ட காட்சியை மட்டும் பார்த்து விட்டு இது தங்களுக்கு எதிரானது என்கிற முடிவுக்கு வருவது வருத்தத்திற்குரியது .

இத்தொடரின் தயாரிப்பாளர் ஒரு கிறிஸ்தவக் கைக்கூலி என்றும் பெரும் மதக் கலவரத்தை தூண்டிவிடும் சதியின் ஒரு பகுதியாகவே இத் தொடர் தயாரிக்க பட்டுள்ளதாகவும் வதந்தி பரப்பபடுகிறது.

காட்சி ஊடகத்துறைக்கு ஏற்பட்டுள்ள இத்தகைய அச்சுறுத்தல் ஏற்படுவதை தடுத்து அதற்கான பாதுகாப்பை அரசியல் சாசனத்தின் பேரால் தமிழக அரசு வழங்கி காட்மேன் தொடரை திட்டமிட்ட வகையில் ஜீ 5 திரையிட அதற்கான பாதுகாப்பை தமிழக அரசு வழங்கிட நேஷனல் கிறிஸ்டியன் கவுன்சில் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்

NCC ஜெபசிங் .
மாநில ஒருங்கிணைப்பாளர்
தமிழ்நாடு

NCC ஜெபசிங் .
மாநிலஒருங்கிணைப்பாளர்
தமிழ்நாடு

Tamil Christian media

National Christian Council

நேஷனல் கிறிஸ்டியன் கவுன்சில் பெந்தேகோஸ்தே நாள் மே 31 வாழ்த்து செய்தி.

பெந்தேகோஸ்தே இயேசு உயிர்த்தெழுதலின் நிறைவாகும்.

கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு மரித்து அடக்கம் பண்ணப்பட்டு உயிர்த்தெழுந்து பரத்துக்கேறி பிதாவினுடைய வலது பரிசத்தில் உட்கார்ந்து அவருடைய அப்போஸ்தலர்களின் சமுதாயத்தின் மீது பரிசுத்த ஆவியை அனுப்பி தனது மீட்பின் கிரியைகளை நிறைவேற்றி முடித்தார்

ஆவியின் அருங்கொடை அனுபவம் பெந்தேகோஸ்தே இயக்கத்தின் ஒரு முக்கிய அம்சம்

பெந்தேகோஸ்தே பெருவிழாவில் நம் உறவுகளுக்கும் , நண்பர்களுக்கும் , குடும்பத்தாருக்கும் , அன்பின் ஆவியானவர் , பரிசுத்தத்தின் ஆவியானவர் , அற்புதத்தின் ஆவியானவர் , ஞானத்தின் ஆவியானவர் பற்றி சேதி சொல்லி கூடி ஜெபித்து வாழ்த்துக்களை பரிமாறிக் கொள்கிறோம்.

ஆண்டவரின் பணியில்

NCC ஜெபசிங்
மாநில ஒருங்கிணைப்பாளர்
நேஷனல் கிறிஸ்டியன் கவுன்சில் .தமிழ்நாடு கமிட்டி               Ph. 8144069997.

Penthecosthe Nalil

Tamil Christian media

NCC JEBA SINGH

நீதிமன்றத்தில் RSS நிகழ்ச்சி .
நேஷனல் கிறிஸ்டியன் கவுன்சில் கண்டனம் .

நீதிமன்ற வளாகத்தில் RSS மருத்துவ முகாம் நடத்தியதை நேஷனல் கிறிஸ்டியன் கவுன்சில் மாநில ஒருங்கிணைப்பாளர் NCC ஜெபசிங் விடுத்துள்ள கண்டன அறிக்கை .

விழுப்புரம் மாவட்டத்தில் விழுப்புரம் திண்டிவனம் ஆகிய ஊர்களில் உள்ள நீதிமன்ற வளாகத்தில் RSS அமைப்பு மருத்துவ முகாம் நடத்த அனுமதி அளித்துள்ளது.

RSS ஒரு மத அமைப்பாகும் / RSS நடத்திய மருத்துவ முகாமில் நீதிபதிகள் பங்கேற்றது அரசியல் சாசனத்தின் படி எவ்வித பாகுபாடின்றி செயல்பட வேண்டிய நீதிபதிகள் மத அமைப்பு நடத்திய நிகழ்வில் கலந்து கொண்டது வருத்தத்திற்குரிய செயலாகும் .

வருங்காலத்தில் எந்த ஒரு மத அமைப்புகள் நடத்தும் நிகழ்ச்சிகளுக்கு நீதிமன்ற வளாகத்தில் அனுமதி வழங்க கூடாது என உரிய அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும் என நேஷனல் கிறிஸ்டியன் கவுன்சில் சார்பாக கேட்டுக் கொள்கிறோம் .

NCC JEBA SINGH
Tamil Christian media

Fake Bishop Godfrey Nobile

அனுப்புநர்

NCC ஜெபசிங்
மாநில ஒருங்கிணைப்பாளர்
நேஷனல் கிறிஸ்டியன் கவுன்சில் .தமிழ்நாடு. தொடர்பு எண் . 8144069997 .

பெறுநர் :


மாண்புமிகு.தமிழக முதலமைச்சர் அவர்கள்.
தலைமை செயலகம்.
சென்னை. 9.

கிறிஸ்தவ மதத்திற்கும், கிறிஸ்தவ போதகர்களுக்கும் எதிராக தொடர்ந்து அவதூறு பரப்பி வரும் திரு.காட்பிரே நோபுள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க கோரி மனு .

மதிப்பிற்குரிய ஐயா அவர்களுக்கு வணக்கம்.

தமிழகத்தில் அம்மாவின் ஆசியில் நல்லாட்சி நடத்தி வரும் தாங்கள் சிறுபான்மையினருக்கு பல்வேறு சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருவதற்கு சிறுபான்மை மக்கள் சார்பாக நன்றி தெரிவித்து கொள்கிறோம்

கிறிஸ்தவ போதகர்கள்மக்களுக்கு நல்வழியையும் , நல்லொழுக்கத்தையும்போதிக்கும் பணியைமட்டும்மே செய்துவருகின்றனர் .

கடந்த ஏப்ரல் மாதம் 20ந் தேதி முதல் எந்த ஒரு பதிவு பெறாத சான்றிதழ்கள் இல்லாது தன்னை தானே போலியாக பேராயர் என அறிவித்து கொள்ளும் திருநெல்வேலி மாவட்டம் இட்டேரி கிராமத்தை சேர்ந்த திரு காட்பிரே நோபுள் அவர்கள் தொடர்ந்து கிறிஸ்தவ மதத்தையும் கிறிஸ்த்தவ போதகர்களையும் தொடர்ந்து சமூக வலைதளங்களில் அவதூறாக பேசி வருகிறார் .

இது போன்ற பேச்சு தமிழகத்தில் உள்ள ஒட்டுமொத்த கிறிஸ்தவர்களுக்கும் , போதகர்களுக்கும் மிகுந்த மன உளைச்சலை உண்டாக்கி வருகிறது.

கரோனா நோய் தடுப்பு நடவடிக்கையில் திருநெல்வேலி மாவட்ட நிர்வாகம் சார்பில் வழங்கப்பட்ட தன்னார்வலர் ID cardயை திரும்ப வழங்காமல் தமிழகத்தில் பல பகுதிகளுக்கு அந்த ID Card யை சட்ட விரோதமாக பயன்படுத்தி வருகிறார்.

சமூக வலைதளங்கில் சாதி உணர்வை தூண்ட கூடிய விதத்திலும், சாதி மோதல்களை ஏற்படுத்தும் விதமாகவும் பெண்கள் குறித்தும் பலவிதமான அவதூறு வார்த்தைகளையும் பேசி தொடர்ந்து சமூக வலைதளங்களில் பரப்பி வருகிறார்.

திரு.காட்பிரே நோபிள் அவர்கள் மீது தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மோசடி வழக்குகள் பதிவாகி நிலுவையில் உள்ளன .

சிறுபான்மை சமூக மக்களையும் , போதகர்களையும் தொடர்ந்து சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பி வரும் திரு. காட்பிரேநோபுள் மீது தகுந்த சட்ட நடவடிக்கை எடுத்து சிறுபான்மை மக்களுக்கும் போதகர்களின் உரிமைகளை காத்திட தாங்கள் ஆவண செய்யும்படி தங்கள் சமூகம் பணிந்து கேட்டுக்கொள்கிறேன்

நன்றி ..

இப்படிக்கு
NCC ஜெபசிங்
மாநில ஒருங்கிணைப்பாளர்
தமிழ்நாடு .

Tamil Christian media

Eid Mubarak wishes from ncc Jebasingh

ஈகைத் திருதாள் நல்வாழ்த்துக்கள்

நேஷனல் கிறிஸ்டியன் கவுன்சில் மாநில ஒருங்கிணைப்பாளர் சகோ.NCC ஜெபசிங் அவர்களின் ஈகைத்திருநாள் வாழ்த்து மடல் .

சகோதரத்துவம், நட்பு, அன்பு, உதவும் எண்ணம் கொண்டுஇல்லாதோருக்கு வழங்கி உலகத்தில் எல்லோருடனும் சமாதனம் சகோதரத்துவம் நிலவ ரமலான் பண்டிகை கொண்டாடப்படுகிறது .

கரோனா பாதிப்புக்குள்ளான ஆதரவற்ற பிற சமுதாய மக்களுக்கு இஸ்லாமிய பெருமக்கள் நாட்டின் பல இடங்களில் உறுதுணையாக இருந்து பல சேவைகள் செய்தனர்

அனைவரும் நல்லிணக்கத்துடனும் , சகோதரத்துவம் உடன் வாழ்ந்திட எல்லாம் வல்ல இறைவனை பிராத்திக்கிறேன் .

அனைவருக்கும் நேஷனல் கிறிஸ்டியன் கவுன்சில் தமிழ்நாடு அமைப்பு சார்பாக ஈகை திரு நாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம் ..

நேஷனல் கிறிஸ்டியன் கவுன்சில் .தமிழ்நாடு.

National Christian Council
Tamil Christian media

National Christian Council

தையல் கலைஞர்களுக்கும் , அரசு பள்ளிகளில் படிக்கும் ஏழை குழந்தைகளுக்கு இலவச பள்ளிச் சீருடை தைக்கும் தையல் கூட்டுறவு பெண்களுக்கும் கரோனா வைரஸ் கால நிவாரணமாக ரூபாய் 5000 வழங்கிட வேண்டும் என்று நேஷ்னல் கிறிஸ்டின் கவுன்சில் இயக்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் திரு. ஜெபசிங் அவர்கள் முதலமைச்சருக்கு மனு அனுப்பியுள்ளார். அதில் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.

அனுப்புநர்


NCC ஜெபசிங் மாநில ஒருங்கிணைப்பாளர் . நேஷனல் கிறிஸ்டியன் கவுன்சில் .தமிழ்நாடு Ph. 8144069997 .

பெறுநர்


மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் தலைமை செயலகம், சென்னை .9

பொருள்: தமிழகத்தில் உள்ள தையல் கலைஞர்களுக்கு நிவாரணம் வழங்க கோரி மனு .

வணக்கம். ஐயா!

தமிழகத்தில் கரோனா வைரஸ் நோயில் இருந்து பாதுகாத்திட தாங்கள் எடுத்துவரும் அனைத்து நடவடிக்கைகளும் பாராட்டுக்குரியதாகும் .

கரோனாவில் இருந்து பாதுகாத்திட அனைத்து தரப்பினரும் வீடுகளிலேயே தனிமை படுத்தி கொள்ள வேண்டும் என அரசு வலியுறுத்தியுள்ளது .

இதனை ஏற்று ஏழை எளிய மக்கள் வீடுகளிலேயே உள்ளனர்.

தமிழ்நாட்டில் தையல் தொழிலில் ஈடுபடுவர்கள் பெரும் பகுதி பெண்கள் ஆவர்.

அதிலும் கணவனால் கைவிடபட்டோர் , விதவைகள் , ஏழ்மை நிலையில் உள்ளவர்கள் தான் தையல் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு செய்த கட்டுமானம் / ஆட்டோ/ சாலையோர வியாபாரிகள் உள்ளிட்ட தொழிலாளர்களுக்கு நிவாரண நிதியாக அரசு 1000 ரூபாய் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் வழங்குவதாக அறிவித்துள்ளது .

மேலும் வாரியத்தில் பதிவு செய்யப்படாத முடி திருத்துவோருக்கு ரூபாய் 2000 தாங்கள் அறிவித்திருப்பது பாராட்டுக்குரியது .

எனவே வாரியத்தில் பதிவு செய்யாத தையல் கலைஞர்களுக்கும் , அரசு பள்ளிகளில் படிக்கும் ஏழை குழந்தைகளுக்கு இலவச பள்ளிச் சிருடை தைக்கும் தையல் கூட்டுறவு பெண்களுக்கும் கரோனா வைரஸ் கால நிவாரணமாக ரூபாய் 5000 வழங்கிட தாங்கள் நடவடிக்கை எடுக்க பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம் .

JABA SINGH / NATIONAL CHRISTIAN COUNCIL

இப்படிக்கு.
NCC ஜெபசிங்
மாநில ஒருங்கிைணப்பாளர்
நேஷனல் கிறிஸ்டியன் கவுன்சில் தமிழ்நாடு .

இவ்வாறு நேஷ்னல் கிறிஸ்டின் கவுன்சில் மாநில ஒருங்கிணைப்பாளர் திரு. ஜெபசிங் அவர்கள் தமிழக முதலமைச்சருக்கு அனுப்பியிருந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

Tamil Christian media

19 sailors killed in a missile attack

Thanks to news 7

In the Gulf of Oman, 19 warriors were killed when an Iranian missile fired a missile into another missile.

The Strait of Hormuz in the Gulf of Oman is considered one of the most important waterways in the world. One-fifth of the world’s crude oil is shipped there. Meanwhile, Iranian warships were engaged in training yesterday in the Bandar e Jask near the Strait of Hormuz. At that time a ship was involved in missile testing. The missile was targeted beneath the water. 

Another Iranian warship, Konarak, was standing in the area at the time. This was followed by a missile launched from a ship to a specific target. However, the missile struck the Konarak ship that was standing nearby due to insufficient space between the target and the target. The accident killed 19 soldiers on the spot. Another 15 people have been hospitalized. 

According to Iranian media reports that the ship’s crew, which was damaged by the attack, is sinking into the water and that the ship’s crew is unaware of it. It was manufactured in the Netherlands and purchased by Iran before the Islamic Revolution of 1979.accident

Tamil தமிழ்

கப்பல் மீது தவறுதாலாக நடத்தப்பட்ட ஏவுகணை தாக்குதலில் 19 வீரர்கள் உயிரிழப்பு

நன்றி நியூஸ்7

ஒமன் வளைகுடாவில், ஈரான் போர்க்கப்பல்கள் ஏவுகணை சோதனை நடத்தியபோது, ஏவுகணை தவறுதலாக மற்றொரு கப்பல் மீது தாக்கியதில் 19 வீரர்கள் உயிரிழந்தனர்.

உலகின் மிக முக்கிய நீர்வழிப்பாதைகளில் ஒன்றாக ஓமன் வளைகுடாவில் உள்ள ஹார்மஸ் ஜலசந்தி கருதப்படுகிறது. இதன் வழியாக உலகின் ஐந்தில் ஒரு பங்கு கச்சா எண்ணெய் கப்பல் மூலம் இவ்வழியாகவே எடுத்துச் செல்லப்படுகிறது. இதனிடையே ஹார்மஸ் ஜலசந்தி அருகே உள்ள பந்தர் இ ஜஸ்க் பகுதியில் நேற்று ஈரான் போர் கப்பல்கள் பயிற்சியில் ஈடுபட்டிருந்தன. அப்போது அதில் ஒரு கப்பல் ஏவுகணை சோதனையில் ஈடுபட்டது. அந்த ஏவுகணை தண்ணீருக்கு அடியில் இலக்கு வைக்கப்பட்டிருந்தது. 

அப்போது கொனாரக் என்ற மற்றொரு ஈரான் போர் கப்பலும் அப்பகுதியில் நின்று கொண்டிருந்தது. இதனை அடுத்து முதல் ஒரு கப்பலில் இருந்து குறிப்பிட்ட இலக்கை நோக்கி ஏவுகணை ஏவப்பட்டது. ஆனால் ஏவுகணை இருந்த இடத்திற்கும், இலக்கிற்கும் இடையே போதுமான இடைவெளி இல்லாததால் அருகில் நின்று கொண்டிருந்த கொனாரக் கப்பலை ஏவுகணை தாக்கியது. இந்த விபத்தில் 19 வீரர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் படுகாயமடைந்த 15 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

இந்த தாக்குதலில் பலத்த சேதமடைந்த கொனாரக் கப்பல் நீரில் மூழ்கி வருவதாகவும் அதில் இருந்த கப்பல் ஊழியர்களின் நிலை தெரியவில்லை என ஈரான் ஊடகங்களில் செய்திகள் வெளியாகி வருகின்றன, கொனாரக் கப்பல் 47 மீட்டர் நீளமும் 154 அடியும் உடைய ஆயுத தளவாடங்களை ஏந்திச்செல்லும் கப்பலாகும். இது நெதர்லாந்தில் தயாரிக்கப்பட்டு 1979 ஆம் ஆண்டு இஸ்லாமிய புரட்சிக்கு முன்னர் ஈரானால் வாங்கப்பட்டது..

Tamil Christian media

National Christian Council

தமிழக முதலமைச்சருக்கு குமரி மாவட்ட கத்தோலிக்க ஆயர்கள் மீது பதியப்பட்ட பொய் வழக்கை ரத்து செய்ய நேஷனல் கிறிஸ்டியன் கவுன்சில் மனு .

அனுப்புநர்:

சகோ.NCC  ஜெபசிங்
மாநில ஒருங்கிணைப்பாளர்
நேஷனல் கிறிஸ்டியன்                  கவுன்சில்
தமிழ்நாடு. Ph. 8144069997

பெறுநர்:

மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள்.
தலைமை செயலகம்
சென்னை .

வணக்கம்

பொருள் : குமரி மாவட்டத்தில் கத்தோலிக்க ஆயர்கள் மீது பதியப்பட்ட பொய் வழக்கை ரத்து செய்ய வேண்டி.

கரோனாவுக்கு எதிராக நாடு முழுவதும் 17 ந் தேதி வரை ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் டாஸ்மார்க் கடைகள் திறக்கப்பட்டன .

இதை கண்டித்து 8ந் தேதி கத்தோலிக்க திருச்சபையின் ஆயர் நசரேன்சூசை . மற்றும் குளித்துறை மறை மாவட்ட ஆயர் ஜெரோம்தாஸ் வறுவேல் உள்ளிட்டோர் பதாகைகள் ஏந்தி அமைதியான முறையில் டாஸ்மார்க் கடை திறப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தனர் .

அப்போது அரசு அறிவித்த தனி மனித இடைவெளி பின்பற்றபட்டது .
சட்ட பிரிவு 144க்கு எதிராக அவர்கள் செயல்படவில்லை .

அரசுக்கு எதிராக அவர்கள் போராடவோ , அரசுக்கு எதிராக போராட்டத்தை தூண்டவோ இல்லை.

மக்களை நல்வழியில் நடத்தி செல்லக் கூடிய குமரி மாவட்ட 2 ஆயர்கள் மீது மாவட்ட காவல் துறை பொய் வழக்கு போட்டுள்ளனர்.

இந்த செயல் தமிழகத்தில் உள்ள ஒட்டுமொத்த சிறுபான்மை மக்களை வேதனை அடைய செய்துள்ளது.

ஆகவே தாங்கள்  கத்தோலிக்க திருச்சபையை சோந்த ஆயர்கள் மீது பதியப்பட்ட பொய் வழக்கை உடனடியாக ரத்து செய்ய தாங்கள் ஆவண செய்யும்படி பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன் .

நன்றி.

இப்படிக்கு*

NCC ஜெபசிங்
மாநில ஒருங்கினணப்பாளர்
நேஷனல் கிறிஸ்டியன் கவுன்சில் தமிழ்நாடு .

தமிழக முதலமைச்சருக்கு குமரி மாவட்ட கத்தோலிக்க ஆயர்கள் மீது பதியப்பட்ட பொய் வழக்கை ரத்து செய்ய நேஷனல் கிறிஸ்டியன் கவுன்சில் அளித்த மனுவில் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.

சகோ. ஜெபசிங். மாநில ஒருங்கிணைப்பாளர்
Tamil Christian media

TN Wineshop

தமிழக அரசு ஆணை:

தமிழக அரசு நாளை முதல் {7/05/2020} மதுக்கடைகளை திறக்க அனுமதி அளித்திருந்தது. இதற்கு பல தரப்பட்ட மக்களும் இயக்கங்களும் எதிர்ப்புகளை தெருவித்து வருகின்றனர்.

நேஷ்னல் கிறிஸ்டின் கவுன்சில்:

இந்த நிலையில் நேஷ்னல் கிறிஸ்டின் அமைப்பின் தமிழக ஒருங்கிணைப்பாளர் சகோ ஜெபசிங் அவர்கள் தமிழக முதலமைச்சருக்குக்கு கோரிக்கை மனுவை அனுப்பியுள்ளார்.

மனுவின் நகல்.

அதில் மிகக் கொடுமையான ஆபத்தை ஏற்படுத்தும் டாஸ்மாக் கடைகளை மூட குறிப்பிட்டிருந்தார். மற்றும் மக்கள் படும் இன்னல்களையும், மதுவினால் ஏற்படும் பாதிப்புகளையும் விளக்கியிருந்தார்.

மக்களின் கருத்து:

கடந்த 30 நாட்களுக்கு மேலாக மதுபானக்கடைகள் அடைக்கப் பட்டிருந்த காரணத்தால், பல மக்கள் போதை பழக்கங்கள் மற்றும் குடிப்பழக்கத்திலிருந்து முழுமையாக விடு பெற்று குடும்பத்தினருடன் சந்தோசமாக வாழ்ந்து வருகின்றனர். மட்டு மல்லாமல் குடிபோதையால் நிகழும் வன்முறைகள், கொலைகள் தற்போது வெகுவாக குறைந்துள்ளது என்று சொல்வதை விட முழுவதுமாக இல்லை என்பதே உண்மை.

ஆகவே, மக்களின் அரசாக இருக்கும் பட்சத்தில் மக்களின் நலனுக்காகவும் ஏழைக்குடும்பங்களை மீட்டெடுக்கும் முயர்ச்சிக்காகவும் தயவு கூர்ந்து பூரண மது விலக்கை அமல் படுத்தினால். பல குடும்பங்கள் மிக மகிழ்ச்சியாக வாழும் என்பதில் எந்த வித ஐயமுமில்லை.

Tamil Christian media

covid-19 Helping Team In Thirunelveli

கோவிட்-19 உயிர் கொல்லி:

கோவிட்-19 உயிர் கொல்லி வைரஸானது, உலகத்தில் வாழும் அனைத்து மனித இனத்தையும் ஆட்கொண்டு அதன் கொடுமையையும் தாக்கத்தையும்  காட்டியுள்ளது . 

உதவிகள்:

கரோனா பாதிப்பால் உணவில்லாமல் வறுமையில் தவிக்கும் நம் மக்களுக்கு உதவுவதற்கு நம்மால் தான் முடியும் .

சராசரி மனிதனுக்கே இப்படி என்றால் மாற்று திறனாளிகள், ஆதரவற்ற முதியோர், மன நலம் பாதிக்கப்பட்டோர் நிலைமை என்ன?

இதுவரை முகம் பார்க்காத பல நல்ல உள்ளங்கள் தன்னார்வமாக பல உதவிகள் செய்து கொண்டு இருக்கிறார்கள்.

எவ்வளவு உதவி தேவைப்பட்டாலும் எங்களால் முடிந்த வரை செய்வோம்.

உணவின் தேவைகள்:

இவை அனைத்தையும் ஒருங்கிணைத்து அந்தந்த பகுதியில் உள்ள நமது குழு உறுப்பினர்கள் மூலமாக அவர்கள் இருக்கும் இடத்திற்கே சென்று உணவு வழங்குகிறோம்.

தற்போது உணவின் தேவைகள் அதிகரித்து உள்ளது . எனவே அனைவரும் விலகியிருந்து ஒருங்கிணைந்து பசியை போக்குவோம் . தற்சமயம் வரை 250க்கும் மேற்பட்ட உணவு தேவைப்படுவோர் கோரிக்கை வந்துள்ளது.

மனமுவந்து நேரடியாக தந்து உதவலாம்:

ஆனால் நாம் தற்போது உணவு கொடுப்பதோ 150 நபர்களுக்கு மட்டும் தான்.

தற்போது நமது குழுவுக்கு உடனடி தேவையாக மளிகை , *காய்கறிகள் தேவைபடுகிறது நீங்கள் மனமுவந்து நேரடியாக தந்து உதவலாம்

உதவ விருப்பம் உள்ளவர்கள் கீழ்கண்ட தொலைபேசியில் தொடர்பு கொள்ளவும் .

தொடர்பு கொள்ளவும்:

சகோ.ஜெபசிங்
8144069997

சகோ.ஹெரால்டு
9366752525

சகோ. A1 டேனி
9944306363

கரோனா பேரிடர் மீட்பு தன்னார்வலர்கள் குழு .திருநெல்வேலி

Tamil Christian media

Mohan c later written book

சகோ. மோகன் சி லாசரஸ் அவர்கள் எழுதிய புத்தகங்களை பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்

  1. ஆழமான ஜெப வாழ்க்கை (Aazhamana Jeba Valkai)
    https://bit.ly/Aazhamana_jeba_Valkai
  2. ஜெபியுங்கள் ஜெயம் பெறுங்கள்!( Jebiyungal Jeyam Perungal)
    https://bit.ly/Jebiyungal_jeyamperungal
Tamil Christian media

Arab Countries

அரபுநாடுகளில் இருந்து கொண்டு முகநூல் மற்றும் ஏனைய சமூக வலைதளங்கள் வாயிலாக #இனமத ரீதியான குறிப்பாக (இஸ்லாமிய, கிறிஸ்தவ)விரோத வெறுக்கத்தக்க பேச்சுக்களை படங்களை பதிவுகள் வீடியோக்கள் கமென்ட் கள் பதிவிடும் மதவாதிகளை கீழுள்ள மின்னஞ்சல் முகவரிகள் மூலம் முறைப்பாடு செய்யலாம். பெரும்பாலும் மரண தண்டனை முதல் குறைந்த பட்சம் 10 ஆண்டுகள் சிறை மற்றும் குறையாமல் 30 இலட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும். இன்றே கண்காணித்து மதவாதிகளை கருவறுக்க தொடங்குங்கள்.

OMAN POLICE: info@rop.gov.om

DUBAI POLICE: mail@dubaipolice.gov.ae

ABUDHABI POLICE: contactus@adpolice.gov.ae

SHARJAH POLICE: alarmsystem@shjpolice.gov.ae

QATAR POLICE: capital@moi.gov.qa

BAHRAIN POLICE: info@policemc.gov.bh

SAUDI ARABIA POLICE: info@moi.gov.sa

KUWAIT POLICE: MoiAsk@moi.gov.kw

Tamil Christian media

Sathiyam TV

முடங்கியதா சத்தியம் தொலைக்காட்சி ஊடகம்?

எப்போதும் நடுநிலையாகவும்,உண்மையாகவும் செய்திகளை வெளியிட்டு வந்த சத்தியம் டிவி கடந்த சில மணி நேரமாக நேரலை நிறுத்தப்பட்டு ஏற்கனவே ஔிப்பரப்பபட்ட வீடியோக்களை மறு ஔிபரப்பு செய்து வருகிறது.

சர்ச்சைகள்

இதனால் பல்வேறு சர்ச்சைகளும், உண்மைக்கு புறம்பானச் செய்திகளும், கிறிஸ்தவச் செய்திகளை ஔிப்பரப்பியதால் சத்தியம் டிவி ஔிப்பரப்புவது நிறுத்தப்பட்டுள்ளது என்றும். சிலர், பிரதமர் மோடியை விமர்ச்சித்ததால் தடைசெய்யப்பட்டதாக சிலரும், சிலர். கொரனா பத்திரிக்கையாளருக்கு வந்துள்ளதால் நிறுத்தப்பட்டதாகவும் சமூக வலைதளங்களில் பரப்பி வந்தனர்.

சத்தியம் தொலைக்காட்சி விளக்கம்:

சத்தியம் டிவியின் வேண்டுகோள்!
தவிர்க்க முடியாத காரணத்தால் உங்கள் சத்தியம் டிவியின் நிகழ்ச்சிகள் வேறொரு இடத்தில் இருந்து ஔிபரப்பாகிறது. முடிந்த அளவுக்கு சத்தியம் செய்திகளை தர முயற்ச்சிக்கிறோம். எப்போதும் போல உங்கள் ஒத்துழைப்பை எதிர்பார்க்கும் சத்தியம் டிவி.

இவ்வாறு சத்தியம் தொலைக்காட்சி பதிவை வெளியிட்டுள்ளது. ஏன் முடங்கியது சத்தியம் தொலைக்காட்சி? என்பது பற்றிய விளக்கங்கள் தற்போது உறுதிபடுத்தப்படாத தகவலாகவே உள்ளன..

தவிர்க்க முடியாத காரணத்தால்
உங்கள் சத்தியம் டிவியின் நிகழ்ச்சிகள் வேறொரு இடத்தில் இருந்து ஔிபரப்பபடுகிறது.
முடிந்த அளவுக்கு சத்தியம் செய்திகளை தர முயர்ச்சிக்கிறோம்….
எப்போதும் போல உங்களது ஒத்துழைப்பை எதிர்பார்க்கும் உங்கள் சத்தியம் தொலைக்காட்சி

இவ்வாறு சத்தியம் தொலைக்காட்சி விளக்கமளித்துள்ளது.

Tamil Christian media

Master of Panamax container ship killed by crew UPDATES

Apr 20 UPDATE:
Both The Attorney General’s Office of Cartagena, and The General Directorate of Maritime Colombia, announced on Apr 18, that they will carry out the investigation of ship’s Master death. His body was found at around 1700 LT Apr 16 on reportedly, main deck, while the ship was berthed. Colombian authorities therefore, are now legally responsible for conducting investigation and all respective actions which may come necessary, to find culprits and pursue justice.

UPDATE: Crew includes Burmese nationality and 2 Ethiopians. According to leaked crew information and Managers Zeaborn Ship Management, Master was killed by intruder or intruders. According to Colombian authorities, Master was killed by crew member or members. Colombian authorities not surprisingly, don’t want to investigate homicide and take the responsibility: “Under UNCLOS, any crime aboard Spirit of Hamburg would fall under the jurisdiction of her flag state, which will have primary responsibility for the investigation, prosecutors said”. Management and crew, on the other hand, are interested in “intruders” version. Situation is rather complicated, because if Colombian authorities refuse to investigate, then official investigation will be, technically, a big, nearly unsolvable, problem.

A statement in relation to the tragic incident in Cartagena
Hamburg, 18 April 2020, 0720 hours – Managers Zeaborn Ship Management regret to advise that in the afternoon of 16 April 2020 one of its valued seafarers of its managed container vessel Spirit of Hamburg has suffered fatal injuries following what is believed to be a violent incident with an intruder onboard the ship in the port of Cartagena, Colombia.
Zeaborn Shipmanagement would like to express its deepest condolences to the family and friends of the seafarer. The next of kin of the crew member have been notified and will be offered full support in this very difficult time. The crew of Spirit of Hamburg will be receiving psychological help following the tragic death of their colleague.
Immediately after the incident all relevant authorities and parties have been notified. Representatives of the company have arrived in Cartagena for further support to the crew. The exact circumstances of the violent incident are yet unknown and police have started an official investigation into the events and conducted interviews with the crew of Spirit of Hamburg. In order to not interfere with the investigation of the local police Zeaborn Shipmanagement will refrain from making any further statements at this stage.
Authorities in Colombia have meanwhile granted permission for the vessel to move from berth to inner anchorage.
Zeaborn Ship Management is aware of social media reports circulating that the crew would be of Filipino nationality. This is incorrect. We would like to add that three senior officers are one month beyond their contractual relief date, but they are showing great professionalism in making the best of the current relief/repatriation restrictions. All other crew are due for relief between now and October.

Comment: Some dozen news outlets of Columbia and Central/South America countries already published the news, all of them referring to, and citing, officials. Some of them mentioned Filipino crew, some didn’t, but it wasn’t social media which first mentioned Filipino nationality. All the local news outlets insist there was a conflict on board, again not out of thin air, but referring to the officials. Some links to local and regional news outlets:
https://www.rcnradio.com/colombia/caribe/asesinan-capitan-de-un-buque-con-banderas-de-hamburgo-en-la-bahia-de-cartagena
https://www.wradio.com.co/noticias/regionales/asesinan-al-capitan-de-una-embarcacion-de-bandera-birmana/20200417/nota/4031531.aspx
https://www.laprensagrafica.com/internacional/Tripulacion-de-barco-aleman-asesina-a-su-capitan-en-aguas-de-Cartagena-20200417-0034.html
https://portalportuario.cl/capitan-de-buque-de-hamburg-sud-muere-tras-rina-con-su-tripulacion-en-aguas-colombianas/
There was absolutely no mistake on my part, I published what I knew and I expressed my doubts, citing the source of the news. Later I published updates, closely monitoring the development. Somehow, Philippines maritime community took it as an insult, defamation, fake news and hate speech, just short of terrorism. I understand I can’t mention Filipino seamen in connection with anything negative, be information right or wrong. From now on, I won’t, ever, mention nationality of Philippines seamen, whatever the story will be, positive or negative, romantic or dramatic, heroic or tragic. I’ll simply define it as “nationality which I can’t mention”.
A few words to Philippines maritime community, about FAKE NEWS:
Why don’t you blame your Manila Times for publishing this: https://www.manilatimes.net/2020/04/16/business/columnists-business/an-industry-that-deserves-to-die-2/714593/ Thanks to NOT FAKE NEWS published by majors, including Manila Times, thousands and tens of thousands of seamen including Filipino, will lose their jobs in cruise industry, in very near future. Thanks to NOT FAKE NEWS, pandemic paranoia already idled many ships and will idle much more, and many more seamen will be out of job.
There are so many things around which really hurt you and your families, and threaten your jobs. Things which no mainstream media, including industry, even mention, because it’s taboo and not in the agenda.
But you attack and accuse me, not them. You’re proud of your reputation, I’m proud of mine. I may make mistakes here and there, but I never make FAKE NEWS. Shame on you.

UPDATE: Latest updates from Colombia leave out nationality of crew members who allegedly, killed Master in the afternoon Apr 16, but Cartagena Attorney General’s Office in official statement to local media confirmed the crime was committed by crew members, not by outsiders.

Master of container ship SPIRIT OF HAMBURG, docked at Cartagena Colombia, was reportedly, killed by crew on board, understood on Apr 16, or during the night Apr 16-17, according to local news radio station RCN Radio. Radio was told by the police, that there was conflict between 12 Filipino crew and 51-year old Burmese Captain, which ended up in a fight. Police so far, aren’t sure as to how it all happened, because there are language problems and discrepancies between seamen narrative and facts police already has.
If confirmed this tragic accident leaves us with most important questions – what triggered conflict and murder, and is it related to coronavirus mess, crew change delays, and growing tension among crew members?
Container ship SPIRIT OF HAMBURG, IMO 9391660, dwt 53139, capacity 3630 TEU, built 2007, flag Isle of Man, manager RICKMERS SHIPMANAGEMENT GMBH.

Source: https://www.maritimebulletin.net/2020/04/17/master-of-panamax-container-ship-killed-by-12-crew/

Tamil Christian media

Augustin Jeba Kumar

அகஸ்டின் ஜெபக்குமார்”

BJR

அவர்கள் 20/8/1946 வருடம் திருநல்வேலியில் பிறந்தவர். தூத்துக்குடியில் வளர்ந்தார். பொறியியல் படிப்பை முடித்தவுடன் சென்னை பல்லாவரத்தில் உள்ள எலக்ட்ரிக்கல் கம்பெனியில் சிறிது காலம் வேலை பார்த்தார். சென்னை பட்டணம் இவருக்கு தேவனை அறிந்து கொள்ள அதிகமாய் உதவி செய்தது. ஆலயத்திற்கு போகும் சாதாரண கிறிஸ்தவனாய் இருந்த இவர் பின்பு தேவனை அதிகமாக தேட ஆரம்பித்தார்.
இவர் வேலை செய்த நிறுவனத்தின் முன் ஓர் ஆலயத்தின் இடம் இருந்தது. அங்கு சென்று மாலை வேலையில் ஊழியம் செய்து வந்தார். இப்போது அங்கு பெரிய ஆலயம் எழுப்பப்பட்டு உள்ளது. 21ம் வயதில் மிக உற்சாகத்துடன் சுவிஷேசத்தை தெருதெருவாய் போய் அறிவித்தார். இவர் அதிகமாக சிறு குழந்தைகளிடம் தேவனின் அன்பை பகிர்ந்து கொள்வதில் நாட்டம் கொண்டார். சுமார் வாரத்திற்கு 800 குழந்தைகளிடம் சுவிஷேசத்தை பகிர்வது இவரின் வழக்கம். சிறிது சிறிதாக வாலிபர்கள் மத்தியில் ஊழியம் செய்ய ஆரம்பித்தார். பின் இவரின் நண்பர்களோடு சேர்ந்து காலை மாலை தெருக்களில் வசனத்தை கூவித்திரியும் காரியத்தையும் செய்து வந்தார்.

வாலிப வயதில் கிறிஸ்தவ நண்பர்களாக சுவிஷேசம் அறியபடாத இடங்களுக்காக வெள்ளிகிழமை இரவு முழுவதும், மற்றும் செவ்வாய் 7-9 மணிவரை ஜெபிப்பது வழக்கம். அந்நாட்களில் தேவன் பீகாரின் வரைபடத்தை கான்பித்தனின் காரணமாக 1972ம் வருடம் தேவன் கொடுத்த தரிசனத்தின் படி தேவ ஊழியம் செய்வதற்காக தன் வேலையை ராஜினாமா செய்துவிட்டு “தேவ ஊழியர்களின் கல்லறை” என்று சொல்லபட்ட பீகார் மாநிலத்திற்கு கடந்து வந்தார். 13-10-1972ல் சுவிஷேச வாசமே இல்லாத பீகார் மண்ணில் கால் பதித்தபோது பீகார் மக்களின் வாழ்க்கை நடைமுறை பற்றியோ, பாஷையோ, ஊரோ தெரியாது. தேவன் கொடுத்த அநாதி அழைப்பை நம்பி வந்த இவருக்கு எதை பற்றியும் கவலையில்லை.

இவர் பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்டிருந்த இவர் மனைவிக்கும் பீகாரை பற்றி அழைப்பு இருந்ததை தெரிந்து கொண்டார். திருமணத்திற்கு முன் நிச்சயிக்கப்பட்ட பெண் முகத்தையோ, பேசினதோ கிடையாது. இவர்களின் பெற்றோர் இருவரின் தீர்மானத்தையும் பார்த்து தேவனின் சமூகத்தில் இணைத்து வைத்தார்கள்

இவர்களுக்கு தேவன் 4 குழந்தைகளை கொடுத்தார். இவர்கள் இணைந்து 4 குழந்தைகளை தத்து எடுத்து வளர்த்தார்கள். இவர்கள் பெற்ற ஓர் குழந்தையும் தத்து எடுத்து வளர்த்ததில் ஓர் குழந்தையும் இறந்து விட்டது. இப்போது மொத்தம் 6 குழந்தைகள் உண்டு. இவர்களில் 4 பேருக்கு திருமணம் ஆகி விட்டது. குடும்பமாக ஊழியம் செய்ய ஆரம்பித்த போது பல கஷ்டங்களை அனுபவித்தாலும் சகோதிரர் எப்போது வருவார் என்று அறிந்திராத போதும் சாலை ஓரத்தில் கிடக்கும் கீரைகளை சமைக்க வைக்கும் போதும் முகம் கோணாமல் இன்முகத்தோடு ஊழியத்தை தாங்கிய மனைவியை தேவன் தந்த அதிசயம் என்று சகோதிரர் சொல்வதுண்டு.

இவரின் சொந்த குழந்தை இறந்த போது ஊழியத்தின் நிமித்தமாக புதைக்க கூட வரவில்லை. ஆனாலும் இவரின் மனைவி மனதில் தாங்கிக்கொண்டு தேவ ஊழியத்தை நிறைவேற்றி கணவருக்கு துணையாக நிற்கிறார்.

தனந்தனியாக பீகாருக்கு கடந்து சென்றார். அதன் பின் 7 ஆண்டுகளுக்கு பின் GEMS ஊழியத்தின் பெயரை நிறுவினார். கால்கடுக்க நடந்து சென்று ஊழியம் செய்ய ஆரம்பித்தார். பல சோதனைகளை வேதனைகளோடு கடந்து போனாலும் அழிந்து போய் கொண்டிருக்கும் ஆத்துமாக்கள் மேல் வைராக்கியம் கொண்டவராய் வெகு சீக்கிரத்தில் எல்லாவற்றையும் கற்று கொண்டார். சுமார் 41 வருடமாக ஊழியத்தை நிறைவேற்றி வரும் இவருடன் 2,300 பேர் ஊழியம் செய்து வருகின்றனர். சுமார் 7 விதமான ஊழியத்தை செய்துவரும் இவரின் ஸ்தாபனம் சுவிஷேசத்தை அறிவிப்பதை மையமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. சுமார் 20 லட்சம் பேரை ஓர் வருடத்தில் சந்தித்து வருகின்றனர். தற்போது 31000 பேருக்கு ஊழிய பயிற்சி கொடுக்கப்பட்டு வருகிறது. 120 பள்ளிகூடங்களை உருவாக்கப்பட்டுள்ளது. பல கல்லூரிகளையும் இவர் இயக்கி வருகிறார். மருத்துவமனையும் உள்ளது. ஓர் வருடத்தில் சுமார் 50,000 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

தனிமனிதனாய் சென்றவர் இன்று ஆலமரமாய் நிற்கிறார். இவரின் ஆணிவேர் இயேசு கிறிஸ்து இருப்பதினால் இன்றும் தனகென்று தேவன் நியமித்த ஓட்டத்தில் தெளிவாக ஓடிகொண்டிருகிறார்…
வெள்ளை உடை, முகத்தில் முட்கள் போன்ற தாடி அழகிய சிரிப்பு கணீர் குரல், அழுத்தமான உச்சரிப்புகள் சிறிதும் தடுமாறாத ஆழமான கருத்துக்கள் கண்களில் கம்பீர வைராக்கியம் எதை பற்றியும் கவலைபடாமல் வேதத்தை மட்டும் போதிக்கும் அதிகாரம் 42 ஆண்டுகளாக தூக்கி சுமக்கும் சுவிசேஷ பாரம் என்று இவர் இளமை பருவத்தில் ஆரம்பித்த ஓட்டம் இன்றும் தொடர்கிறது கர்த்தர்தாமே சகோதரரின் ஆயுளை கூட்டி கொடுத்து ஊழியம் காலகாலமாய் தொடர்ந்து செம்மையாய் நடக்க அருள் புரிவாரக.

Tamil Christian media

Indian Crew Member Dies After Testing Positive for COVID-19

Dear Friends, with deep sorrow we would like to inform you that a fellow crew member who tested positive for the novel coronavirus has passed away.

Our hearts are saddened of the passing of the Costa Favolosa security officer Andrew Fernandes, age 48, from Mumbai, India.

On Sunday, March 29, Andrew was transferred via tender boat and escorted by the Coast Guard from Costa Favolosa off the coast of Miami and sent to a hospital. People wearing hazmat suits took the crew member from the Coast Guard station in Miami Beach.

His wife Maria and her four children have been hoping for a miracle ever since Andrew, tested positive for COVID-19 and transferred from the ship to Larkin Community Hospital in Miami, Floridan, reports the Indian newspaper Mid-Day.

Andrew’s wife said his condition worsened and the doctors had to sedate him and put him on ventilator support after he had pneumonia and lung infection.

He need to be transferred to Miami Jackson hospital, however, there were no beds available at the time said, family member.

Forward to : Maritime News. & Crew Center & NUSU Marine Association & Indian Seafarer Welfare Organization

Edit & Verified By BJR

Tamil Christian media

Important Message from NCC Jeba Singh

முக்கிய அறிவிப்பு ;

கொரோனா பாதிப்பால் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில்,
திருநெல்வேலி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள தூய்மை பணியாளர்களுக்கு மதிய உணவு தினமும் 100 பேர்க்கு கொடுக்கபடுகிறது. மேலும் மாநகர பகுதிகளில் எந்த இடத்திலும் உணவு இல்லாமல் யார் இருந்தாலும் உடனடியாக தேவைகளுக்கு அழைக்கலாம் ..இவண் .

கரோனா பேரிடர் மீட்பு

தன்னார்வலர்கள் குழு

திருநெல்வேலி

தொடர்புக்கு

சகோ.ஜெபசிங்.

8144069997

P.ராயன்
9442173031 சகோ.ஹெரால்டு 9366752525 சகோ. A1 டேனி 9944306363 சகோ. செல்வன் கிளாஸ்டன்
9865576040

அனைவருக்கும் பகிருங்கள் …. நேரம் மதியம் 12.30 மணி முதல் 2 மணி வரை

ஒரு வேலை உணவு இல்லாமல் இருக்கும் ஒருவருக்கு உதவும் | அனைவருக்கும் பகிருங்கள்….👏👏

Tamil Christian media

National Christian Council Organizer Jeba Singh Notice

திருநெல்வேலி மாநகராட்சி பகுதியில் தனியாக வசிக்கும் முதியவர்கள், மற்றும் மனநலம் பாதிக்கப்பட்ட வீடு இல்லாமல் சாலை ஒரங்களில் வசிக்கும் ஆதரவற்றோர்க்கு உண்ண உணவு, அவசரமான மருந்துகள் எதுவும் தேவையெனில் உடன் கீழ்கண்ட எண்களை தொடர்பு கொண்டால்,நல்லமனம்கொண்ட அன்பர்கள் வந்து உதவ காத்துள்ளார்கள் !

1. சகோ.செ.சா. ஜெபசிங் . மாநில ஒருங்கிணைப்பாளர் .
நேஷனல் கிறிஸ்டியன் கவுன்சில்’ தமிழ்நாடு
8144069997

2 சகோ.D ஹெரால்டு’
மாநில தலைவர்
அகில இந்திய கிறிஸ்டியன் கூட்டமைப்பு _ தமிழ்நாடு.
9366752525

கரோனாவை முறியடிப்போம். வெளியில் செல்லும் போது முக கவசம் அணிவோம்.
தமிழகஅரசு செயல்படுத்தும் அனைத்து  முயற்சிக்கும் உறுதுணையாக இருப்போம்

National Christian Council